கங்குலி-யின் பதவிகாலத்தை நீட்டிக்க திட்டம்; BCCI கூட்டத்தில் முடிவு!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பிரதிநிதித்துவப்படுத்தும் BCCI, ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ் அதன் அதிகாரிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தது. 

Written by - Mukesh M | Last Updated : Dec 1, 2019, 08:24 PM IST
  • இந்த புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது.
  • மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க முடியும். அதன் பின்னர் மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் அவசியம்
  • கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்
கங்குலி-யின் பதவிகாலத்தை நீட்டிக்க திட்டம்; BCCI கூட்டத்தில் முடிவு! title=

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பிரதிநிதித்துவப்படுத்தும் BCCI, ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ் அதன் அதிகாரிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தது. 

அந்தவகையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒன்பது மாத காலத்தை மேலும் அதிகரிக்க BCCI இவ்வாறு வழிவகுத்துள்ளது.

இந்த முடிவு BCCI-யின் 88-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது, எனினும் இதை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும். இதுதொடர்பாக தகவல் அளித்து, ஒரு உயர் அதிகாரி, முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது அவை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் படி, ஒரு அதிகாரி BCCI அல்லது மாநில சங்கத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தால், அவர் மூன்று வருடங்களுக்கு தேவையான இடைவெளி எடுக்க வேண்டும்.

முன்னதாக கடந்த அக்டோபரில் BCCI-யின் புதிய தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சம்பந்தமாக, அவருக்கு 9 மாத கால அவகாசம் உள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 23 அன்று BCCI-ன் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அடுத்த ஆண்டு பதவி விலக வேண்டியிருக்கும். ஆனால் தற்போது இந்த புது விலக்கு அளிக்கப்பட்ட பின்னர் அவர் 2024 வரை அவரது பதவியில் தொடர முடியும் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். 

இந்த அதிரடி முடிவுக் தொடர்பான துணுக்கு இந்த மாதம் முற்பகுதியில் வெளியானது. வெளியான செய்திகளின் படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை மாற்ற நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்தது.

இந்த புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க முடியும். அதன் பின்னர் மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் அவசியம் ஆகும். மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என பல அம்சங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்த விதிமுறைகள் செயல்படுத்த BCCI-யின் 88-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Trending News