இந்திய அணிக்கு கொடுக்கப்படும் தரமில்லாத உணவுகள்! வேண்டுமென்றே சதியா?

மெனுவில் சூடான உணவு இல்லாததால், பயிற்சிக்குப் பின் சாப்பிடுவதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Written by - RK Spark | Last Updated : Oct 26, 2022, 08:34 AM IST
  • டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
  • முதல் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
  • அடுத்து நெதர்லாந்துடன் விளையாட உள்ளது.
இந்திய அணிக்கு கொடுக்கப்படும் தரமில்லாத உணவுகள்! வேண்டுமென்றே சதியா? title=

டி20 உலகக் கோப்பை 2022: இந்திய கிரிக்கெட் அணிக்கு சூடான உணவு வழங்கப்படாததால், பயிற்சிக்குப் பின் மெனுவில் திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. செவ்வாயன்று இந்திய அணி தாமாக ஒரு பயிற்சியை நடத்தியது. அனைத்து வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டர் சூர்ய குமார் யாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆகியோருக்கு இந்த பயிற்சியில் ஓய்வு அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பிந்தைய மெனுவில் பழங்கள் மற்றும் சாண்ட்விச்களும் சேர்க்கப்பட்டுள்ளன.  இதனால் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சிக்குப் பின் மெனுவில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒரு சில வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறைகளில் உணவு சாப்பிட முடிவு செய்தனர். 

மேலும் படிக்க | எதாச்சம் கருத்தா பேசுவோமா? வைரலாகும் கார்த்திக் - அஷ்வினின் வீடியோ!

பயிற்சி செய்த பிறகு இந்திய வீரர்களுக்கு சூடான உணவு வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.  குறிப்பிடத்தக்க வகையில், பயிற்சிக்குப் பின் மெனு எல்லா அணிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். மதியம் பயிற்சி முடிந்த பின்னர் வீரர்கள் சரியான மதிய உணவை எதிர்பார்த்தனர். "சில வீரர்கள் வேறு வழி இன்றி பழங்கள் மற்றும் சான்வெஜ் சாப்பிட்டனர்.  ஆனால் அனைவரும் மதிய உணவு சாப்பிட விரும்பினர், எனவே அவர்கள் ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றனர்," என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறினார்.

 

குறிப்பிடத்தக்க வகையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022ன் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பு மதிய உணவுக்குப் பிறகு சூடான உணவை வழங்குவதில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.  இருப்பினும், ஹோஸ்ட் செய்யும் நாடும் உணவுக்கு பொறுப்பாக உள்ளது.  இரண்டு மணிநேர பயிற்சிக்குப் பிறகு, வெண்ணெய், தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் கொண்ட குளிர் சாண்ட்விச்சை (கிரில் கூட செய்யவில்லை) வீரர்கள் சாப்பிட முடியாது என்று கூறினார்.  இந்தியா தனது இரண்டாவது போட்டியை நெதர்லாந்துக்கு எதிராக அக்டோபர் 27 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

மேலும் படிக்க | SA vs ZIM போட்டி ரத்தால் சிக்கலில் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News