’சேட்டா அடுத்த 7 மேட்சுக்கும் நீங்க ஓப்பனிங்’ சஞ்சுவிடம் அப்போவே சொன்ன சூர்யகுமார் யாதவ்

Sanju Samson | துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் ஓப்பனிங் நான் இறங்கப்போகிறேன் என்பதை சூர்யகுமார் என்னிடம் தெரிவித்துவிட்டார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 9, 2024, 02:59 PM IST
  • டி20ல் இரண்டாவது சதம் விளாசிய சஞ்சு
  • இந்த சாதனை படைத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்
  • கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு புகழாரம்
’சேட்டா அடுத்த 7 மேட்சுக்கும் நீங்க ஓப்பனிங்’ சஞ்சுவிடம் அப்போவே சொன்ன சூர்யகுமார் யாதவ் title=

Sanju Samson News | தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. இதனால் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. போட்டிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நான் ஓப்பனிங் இறங்குவதை கன்பார்ம் செய்து கூறிவிட்டார் என கூறினார்.

"தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய ஷாட்டுகள் எல்லாம் வொர்க் ஆனதில் மகிழ்ச்சி. தென்னாப்பிரிக்கா ஒரு வலுவான அணி. அந்த அணியை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறோம். நான் இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கியதை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் பாய்... துலீப் டிராபியின் போதே தெரிவித்துவிட்டார். நான் ஒரு அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அவர் இன்னொரு அணிக்காக விளையாடினார். போட்டியின்போது என்னுடன் பேசிய சூர்யா.... சேட்டா, அடுத்த 7 டி20 போட்டிகளுக்கு நீங்க தான் ஓப்பனிங். என்ன நடந்தாலும் உங்களை நான் சப்போர்ட் செய்வேன் என தெரிவித்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பூஸ்டராக இருந்தது" என சஞ்சு கூறினார்.

மேலும் படிக்க | IND vs SA: டி20இல் சேர் போட்டு உட்கார்ந்துவிட்ட சேட்டன்... இனி இந்த ஸ்டார் வீரர் ஓய்வு பெறலாம்!

இலங்கை தொடரில் மோசமாக ஆடியது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், " நான் இலங்கை தொடரில் சிறப்பாக ஆடவில்லை. ஆனால், கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிறைய முறை என்னை தொலைபேசியில் அழைத்தனர். நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை அறிவுறுத்தினர். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கிற்கு எதிரான நல்ல விளையாடவில்லை என கூறி, கேரளாவில் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்து கடினமான பிட்சில் பயிற்சி எடுக்குமாறு அறிவுறுத்தினர். அந்த ஆலோசனை எனக்கு உதவியாக இருந்தது. ஒரு பிளேயருக்கு கடினமான காலத்தில் பாசிடிவ் சப்போர்ட் தேவை. அது எனக்கு கேப்டன் சூர்யகுமார் நிறைய கொடுத்தார். அதனால் தான் இப்படியொரு இன்னிங்ஸ் என்னால் ஆட முடிந்தது. ஒட்டுமொத்தமாக நல்ல இன்னிங்ஸ் என்னுடைய பேட்டில் இருந்து வந்ததை மகிழ்ச்சியாக பார்க்கிறேன்" என தெரிவித்தார். 

கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது, " சஞ்சு 90களில்இருக்கும்போது கூட பவுண்டரி அடிக்கவே முயற்சிக்கிறார். இது அவர் ஒரு டீம் மேன் என்பதை தெளிவாக காட்டுகிறது. மற்றபடி அவர் சிறப்பான பிளேயர் என எல்லோருக்கும் தெரியும்" என கூறினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், டி20 போட்டியில் இந்திய அணிக்காக இரண்டு முறை சதமடித்து ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் பிளேயர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் சதமடித்திருந்தார். 

மேலும் படிக்க | கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி சொன்ன ’குட்டி’ ஹேப்பி நியூஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News