பிசிசிஐயிடம் விராட் கோலி சொன்ன அந்த விஷயம்... இனி எப்போது விளையாடுவார்?

Virat Kohli Rest: வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்போதைக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என விராட் கோலி பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 29, 2023, 06:09 PM IST
  • இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
  • அதில் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடுகிறது.
  • ஜனவரியில் ஆப்கானிஸ்தான் உடன் டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
பிசிசிஐயிடம் விராட் கோலி சொன்ன அந்த விஷயம்... இனி எப்போது விளையாடுவார்? title=

Team India, Virat Kohli Rest: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) பின் இந்திய அணியில் வீரர்கள் பெரும்பாலானோர் தற்போது வரை ஓய்வில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டும்தான் உலகக் கோப்பையில் அணியில் இருந்தவர்கள் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.

கடும் எதிர்பார்ப்பில் தென்னாப்பிரிக்கா தொடர்

பிரசித் கிருஷ்ணா ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், இஷான் கிஷன் முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மான் கில்லுக்கு பதிலாக விளையாடினார். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவின் காயத்திற்கு பின் அணியில் இணைந்து இறுதிப்போட்டி வரை 7 போட்டிகளில் விளையாடினார். அந்த வகையில், ஆஸ்திரேலியா (Australia National Cricket Team) தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி (India National Cricket Team) முன்னிலை வகித்து வருகிறது, இன்னும் இரண்டு போட்டிகள் டிச. 1 மற்றும் டிச. 3 ஆகிய தேதிகளில் ராய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.

இந்திய ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின் சற்று துவண்டு உள்ள நிலையில், அடுத்த மாதம் இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa National Cricket Team) மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம்தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்களின் எதிர்காலம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டது. கேஎல் ராகுல் கண்டிப்பாக மூன்று தொடர்களிலும் இடம்பெறுவார் என்றாலும், மற்றவர்களின் நிலை எப்படி என்பதற்கு பலரும் காத்திருக்கின்றனர். https://zeenews.india.com/tamil/sports/big-many-changes-may-happen-in-te...

மேலும் படிக்க | தொடரும் ராகுல் டிராவிட்... பிசிசிஐ போடும் மாஸ்டர் பிளான் - ரோஹித், விராட் நிலை என்ன?

ஒருநாள், டி20இல் ஓய்வு?

இது ஒருபுறம் இருக்க விராட் கோலி (Virat Kohli) தரப்பில் இருந்து தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விராட் கோலி காலவரையறையின்றி ஒயிட்-பால் போட்டிகளில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், தென்னாப்பிரிக்கா அணிக்கு (IND vs SA) எதிரான டி20, ஒருநாள் தொடர் மட்டுமின்றி ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரிலும் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.  

மேலும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கூறியது?

பிசிசிஐ வட்டாரம் ஊடகத்திடம் பேசுகையில்,"கோலி பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் தனக்கு லிமிடெட் எடிஷன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவை என்றும், அடுத்து அவர் எப்போது ஒயிட்-பால் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார் என்பது குறித்து அவர்களிடம் விராட்டே தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போவதாக பிசிசிஐக்கு அறிவித்துள்ளார், அதாவது தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தயாராக இருக்கிறார்" என்றார். விராட் கோலி குறித்து இந்த தகவல் வெளியான நிலையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) குறித்து இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை. ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளர் குழுவினரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தோனி தூக்கப்போகும் அந்த மூன்று வீரர்கள் யார் யார்?... சிஎஸ்கேவின் முக்கிய தேவைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News