தோல்வி முகத்தை மாற்ற புது யுக்தியுடன் களமிறங்கும் விராட் கோலி!

IPL 2019 தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன!

Last Updated : Apr 30, 2019, 08:54 PM IST
தோல்வி முகத்தை மாற்ற புது யுக்தியுடன் களமிறங்கும் விராட் கோலி! title=

08:53 PM 30-04-2019

தொடர் மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது!

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.


IPL 2019 தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன!

IPL 2019 தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியல் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்பினை பெங்களூரு அணி இழந்தவிட்டது என கூறப்படும் போதிலும், மற்ற அணிகள் தொடர்ந்து தோல்வியை தழுவினால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெறும்.

தற்போது 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே பெறும். 12 புள்ளிகளை கொண்டு இதுவரை எந்த அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இல்லை, ஒரு வேலை பெங்களூரு அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மற்ற அணிகளின் தயவில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இதே நிலைமை தான்.,

பொதுவாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங்க் வெளிப்படுத்தும் விராட் கோலி., ராஜஸ்தான் அணிக்கு எதிராக மிக குறைந்த சராசரி [25(21.38)] மற்றும் மிக குறைந்த ஸ்ட்ரைக் ரேட் [120(101.48)] கொண்டுள்ளார்.

பெங்களுரு அணிக்கு எதிராக 9 விக்கெட் குவித்துள்ள ஸ்ரேயஸ் கோபால் இன்றைய போட்டியிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும், 8 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராஜஸ்தான் 4 போட்டிகளிலும், பெங்களூரு அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Trending News