ஐபிஎல் 2022 முதல் எலிமினேட்டர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூபிளசிஸ் கோல் டக் அவுட்டாகி வெளியேறினார். கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஜொலிக்காத நிலையில், 3வது இடத்தில் களமிறங்கிய படிதார், லக்னோ அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். ரவி பிஷ்னோய் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய படிதார் 112 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்
இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், ஐபிஎல்லில் பிளேஆஃப் சுற்றில் சதமடித்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். இவரின் ஆட்டத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர். அப்போது, படிதார் ஸ்பின்னர்களை எதிர்கொண்ட விதத்தைப் பார்த்து லக்ஷ்மண் வியந்துபோனார்.
இவரின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்தது. சதமடித்த படிதார், இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஏலத்தில் விலைபோகாத அவரை, மாற்று ஆட்டக்காரராக ஆர்சிபி அணி வெறும் 20 லட்சத்துக்கு அணிக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து சிறப்பாக இந்த தொடரில் ஆடி வந்த படிதார், லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டரில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
இந்திய அணிக்கு களமிறங்காத ஒரு வீரர், ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஒருவர் மாற்று வீரராக ஐபிஎல் அணிக்குள் வந்து சதமடித்திருப்பது படிதார் மட்டுமே. இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். படிதாருக்கு பக்கபலமாக மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.
மேலும் படிக்க | தோனி எனது அண்ணன் மாதிரி: ஹர்திக் பாண்டியா பெருமிதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR