மகளிர் கிர்கெட் வீரர் ஹர்மன்ப்ரீத் கவுர் டிஎஸ்பி ஆனார்!

Last Updated : Jul 24, 2017, 01:18 PM IST
மகளிர் கிர்கெட் வீரர் ஹர்மன்ப்ரீத் கவுர் டிஎஸ்பி ஆனார்! title=

இந்திய மகளிர் உலக கோப்பை பைனலில் தோல்வி ஆனாலும் ரசிகர்களின் கவனத்தை இவர்கள் ஈர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு தேர்வானார்கள். ஜோக்ஸ் - 3

இதில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதில் முக்கியப் பங்காற்றியவர் ஹர்மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதிய இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அதிரவைத்தார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலி போட்டியிலும் அவர் அரை சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து அசத்திய கவுருக்கு பஞ்சாப் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் பணி வழங்குவதாக அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, உலகக் கோப்பையில் அவரது அதிரடி ஆட்டத்தால், அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் டிஎஸ்பி பதிவிக்கு அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.  

Trending News