டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய நீரஜ் சோப்ராவை நாடே பெருமைப் படுத்தி வருகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கான ஒரே தங்கப் பதக்கத்தை வென்ற பாட்னாவை சேர்ந்த நீரஜ் சோப்ராவிற்கு (Neeraj Chopra) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பரிசுகள் குவியத் தொடங்கியுள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்தன. பார்வையாளர்கள் இல்லாதது மட்டுமே ஒரே குறையாக இருந்தது. 206 நாடுகளை சேர்ந்த அணிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. 11,326 வீரர்கள் 339 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் நடந்து முடிந்தன.
இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் இருந்து 11 பேர் பங்கேற்றனர். சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தற்போது பரிசுகள் அனைத்து தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன. ஹரியானா அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ரொக்கம், அரசு வேலை மற்றும் வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Tokyo Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பஞ்சாப் அரசு சார்பில் 2 கோடி ரொக்கம், மணிப்பூர் அரசு சார்பில் ஒரு கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக ஒரு கோடி, பிசிசிஐ சார்பாக ஒரு கோடி, எலன் குழுமம் சார்பில் 25 லட்சம் என்று பலர் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 என்ற புதிய மாடல் காரை பரிசாக வழங்குகிறது. இண்டிகோ நிறுவனம் தங்களது விமானத்தில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-இல் நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி (Olympic Games) தற்போது 2021 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அடுத்து ஒலிம்பிக் போட்டிகள் 2024-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.
ALSO READ: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR