T20 World Cup 2022 Indian Team: 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி ஒரே ஒருமுறை பட்டத்தை வென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நடைபெற்ற உலக கோப்பைகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. இப்போது ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அங்கு சென்றுள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் இந்திய அணி வலுவான வீரர்களுடன் சென்றிருக்கும் நிலையில், 2 இளம் பந்து வீச்சாளர்களையும் அழைத்துச் சென்றுள்ளது.
இளம் பந்துவீச்சாளர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி மற்றும் ஐபிஎல் 2022 டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும், ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இளம் பந்துவீச்சாளர்களான இருவரும், 20 ஓவர் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். 20 ஓவர் உலககோப்பையில் பேட்ஸ்மேன்களை தயார்படுத்துவதற்காக நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் .
மேலும் படிக்க | 2022 உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறேன்: மெஸ்ஸியின் அதிர்ச்சி அறிவிப்பு
ஐபிஎல் 2022ல் சிறப்பான பந்துவீச்சு
ஐபிஎல் 2022 சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சிறப்பாக இருக்கவிலை. அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை. அதேநேரத்தில் அந்த அணியில் இடம்பிடித்திருந்த இளம் வீரர் முகேஷ் சவுத்ரி தனது ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் 2022ல் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோல், சேத்தன் சர்காரியாவும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக தேர்வானார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு சென்றார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், 17 போட்டிகளில் விளையாடி மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அவர்.
வலுவான இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் சென்றுள்ளது. டாப் ஆர்டரில் ரோகித், ராகுல், விராட் கோலி ஆகியோர் விளையாட மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதேபோல் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் பின்வரிசை நட்சத்திரங்களாக இருப்பதால், இந்திய அணியின் ஆட்டம் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ