ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு மினி ஏலம் இம்மாதம் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இன்னும் மூன்று வாரக்காலமே இருக்கும் நிலையில், ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலும், அவர்களின் ஏலத்தொகை குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
மினி ஏலத்தில் மொத்தம் 991 வீரர்கள் பங்கெடுக்க உள்ளனர். அதில், 714 இந்திய வீரர்களும், 277 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். தொடர்ந்து, வீரர்கள் ஏலத்தில் தங்களின் அடிப்படை தொகையையும் நிர்ணயித்து உள்ளனர். இதில், 2 கோடி ரூபாய் தொடங்கி பல்வேறு தொகைகளின்கீழ் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
கேதர் ஜாதவ் அடிப்படை தொகை?
இந்த ஏலத்தில், அதிகம் எதிர்பார்ப்புள்ள வீரர்களான பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கேம்ரூன் கிரீன் உள்ளிட்டோர் தங்களின் 2 கோடி ரூபாயை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளனர். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த மயாங்க் அகர்வால், சமீபத்தில் அணியில் இருந்த விடுவிக்கப்பட்டார். அவர் தனது அடிப்படை தொகையை ரூ. 1 கோடியாக நிர்ணயித்துள்ளார்.
அதே தொகையில், இந்திய வீரர்களான மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் ஏலத்தில் விண்ணப்பித்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி பலரும் 1 கோடி ரூபாயை அடிப்படை தொகையாக அறிவித்துள்ளனர்.
ரஹானே, இஷாந்த் சர்மா
ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகிய இந்திய வீரர்கள் ஃபார்மில் இல்லாததால், ஏலத்திற்கான அடிப்படை விலையை குறைத்துள்ளனர். ரஹானேவின் அடிப்படை தொகை இந்த முறை ரூ. 50 லட்சமாக உள்ளது. 2022 மெகா ஏலத்தில் யாராலும் ஏலம் எடுக்கப்படாத இஷாந்த், ரூ. 75 லட்சத்தை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் ஒருவரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், தனது அடிப்படை விலையை ரூ.50 லட்சமாக பட்டியலிட்டுள்ளார். சௌராஷ்டிரா அணியை விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற செய்த உனட்கட், இக்கட்டான சூழலில் பல்வேறு முன்னணி பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை கடந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.3 கோடிக்கு வாங்கியிருந்தது. அவரை சமீபத்தில் அந்த அணி விடுவித்தது.
NEWS- 991 players register for TATA IPL 2023 Player Auction.
A total of 991 players (714 Indian and 277 overseas players) have signed up to be part of the TATA IPL 2023 Player Auction set to take place on 23rd December 2022 in Kochi.
More details here - https://t.co/JEpOBUKcKe
— IndianPremierLeague (@IPL) December 1, 2022
ரூ. 2 கோடி அடிப்படை தொகை கொண்ட வீரர்கள்:
டாம் பான்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், நாதன் கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், கேன் வில்லியசன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரிலீ ரோசோவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன்.
ரூ.1.5 கோடி அடிப்படை தொகை கொண்ட வீரர்கள்:
சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
ரூ.1 கோடி அடிப்படை தொகை கொண்ட வீரர்கள்:
மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், டாம் ஹென்றி , டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், டேவிட் வைஸ்
மேலும் படிக்க | ரோகித், விராட் கோலிக்கு சலுகை எதற்கு? சரமாரியாக விளாசிய கவாஸ்கர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ