தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசி., த்ரில் வெற்றி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 25-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது!

Last Updated : Jun 20, 2019, 06:31 AM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசி., த்ரில் வெற்றி! title=

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 25-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 25-வது லீக் ஆட்டம் ப்ரிம்னிகம் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பரிக்கா அணிகள் மோதின. 

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி சற்று தாமதமாகவே துவங்கப்பட்டது. இதனால் போட்டியின் ஓவர்கள் இரு அணிகளுக்கும் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ராசிவ் வான் தூசன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67*(64) ரன்கள் குவித்தார். துவக்க வீரராக களமிறங்கிய ஆம்லா 55(83) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் பெர்கியூசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டில் 35(59), கோலிம் முன்றோ 9(5) ரன்களில் வெளியேற, முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேன் வில்லியம்சன் இறுதி வரை களத்தில் நின்று 106*(138) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக கோளின் டி கிராண்டோமெ 60(47) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 பந்துகள் மீதம் இருந்து நிலையில் நியூசிலாந்து அணி 245 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Trending News