உடல் எடையை குறைக்க இப்படி செய்வது தவறு: நோட் பண்ணுங்க மக்களே

Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைபிடிகக் வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2025, 05:47 PM IST
  • உணவைத் தவிர்ப்பது.
  • கார்டியோ பயிற்சிகளை மட்டும் செய்தல்.
  • கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது.
உடல் எடையை குறைக்க இப்படி செய்வது தவறு: நோட் பண்ணுங்க மக்களே title=

Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தி வரும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம். அதுவும், தொப்பை கொழுப்பு மற்றும் இடுப்பு பகுதிகளில் சேரும் கொழுப்பை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது. 

உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைபிடிகக் வேண்டும். உடல் எடையை குறைக்க சிலர் சில கடுமையான உணவு கட்டுப்படுகளை மேற்கொள்கிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது. சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 

நாம் எடை இழப்புக்கு எடுக்கும் முயற்சிகளுடன் எதை எல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். உடல் பருமனை குறைக்க நினைத்தால், சில தவறுகளை நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உணவைத் தவிர்ப்பது:

உடல் எடையை குறைக்க உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. உணவைத் தவிர்ப்பது பசியை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் ஆற்றல் அளவைக் குறைக்கிறது. இதற்கு பதிலாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் சீரான மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கார்டியோ பயிற்சிகளை மட்டும் செய்தல்:

உடல் எடையைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் மட்டும் போதும் என நினைப்பது தவறு. கார்டியோ பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்கின்றன. ஆனால் நம் உடலுக்கு நல்ல கொழுப்புகளும் தேவை.  இவற்றால் உடலில் ஆற்றல் இருக்கும்.

மேலும் படிக்க | சிக்கன் vsமட்டன் எது உடலுக்குச் சிறந்தது? அதிகமாகச் சாப்பிட வேண்டியது எது..குறைவாகச் சாப்பிட வேண்டியது எது!

தினமும் வலிமை பயிற்சி செய்வது:

எடை இழப்புக்கு வலிமை பயிற்சி அவசியம் ஆனால் உடலுக்கும் ஓய்வு தேவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய பயிற்சிகளை செய்வதால் தசைகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் சோர்வாக இருக்கிறது. ஒரு வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் இடைவெளி எடுத்து இத்தகைய நடைமுறையை பின்பற்றினால் சரியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது:

அனைவரும் நினைப்பது போல, கார்போஹைட்ரேட்டுகள் எடையை அதிகரிக்காது. எனவே அதை தவிர்ப்பது சரியல்ல. உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவை சமமாக வைத்திருப்பது முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது அன்றாட உணவின் இன்றியமையாத பகுதியாகும். ஆகையால், எடையை இழக்க இதை முற்றிலும் தவிர்ப்பது மிகப்பெரிய தவறாகிப் போகலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News