Los Angeles: அமெரிக்காவின் ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த 7ஆம் தேதி பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. 5 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், இதுவரை 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
40,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹாலிவுட் திரையுலகின் தலைநகரம்
கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு பல்வேறு திரைப்பட நிறுவனங்கள், ஷுட்டிங் செய்யப்படும் இடங்கள் அமைந்துள்ளன. இதனால் ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது.
காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள்
வான்வழி தீயணைப்பு நடவடிக்கைகள் இருந்தபோதும் நேற்று(ஜன.11) தீயானது கிழக்கு நோக்கி பரவியது. இது getty center art museum-க்கு அச்சுறுத்தலாக அமைந்தது. மேலும், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கை நோக்கி தீ பரவியது. இன்னும் மூன்று நாட்களுக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இது கவலை அளிக்கிறது என LA TIMES வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாத காரணத்தால் வறண்ட பகுதிகளில் தீ பற்றிய நிலையில், அது காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய தீ விபத்தாக மாறியுள்ள நிலையில், 40000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் தீயில் நாசமாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில், ஈடன் கேன்யன் மற்றும் ஹைலேண்ட் பூங்காவில் ஏற்பட தீ பள்ளிகள் மற்றும் வீடுகளை பதித்துள்ளன. இரண்டு தொடக்கப் பள்ளிகள் மற்றும் பாலிசேட்ஸ் சார்ட்டர் உயர்நிலைப் பள்ளியின் சில பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளன.
காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதம் குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், பல பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டி வருகிறது.
சிம்ப்சன் கார்ட்டூன்(Simpson Cartoon)
அமெரிக்கா இதுவரை வரலாற்றில் காணாத தீ விபத்து சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த தீ விபத்தை கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கார்ட்டூனால் கணிக்கப்பட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் சிம்ப்சன் கார்ட்டூன் என்ற நிறுவனம் இதனை 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது எபிஷோடு வாயிலாக கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது ட்வின் டவர் தாக்குதல், கரோனா வைரஸ் முதல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆவார் என்பது வரை இந்த கார்ட்டூன் கணித்ததாகக் கூறப்படுகிறது. சிம்ப்சன் என்பது ஒரு அமெரிக்க அனிமேஷன் சிட்காம் ஆகும். 1989ஆம் ஆண்டு முதல் இந்த கார்ட்டூன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்ட எபிஷோடுகளை ஒளிபரப்பு செய்துள்ளது.
மேலும், நடக்க இருக்கும் பல விஷயங்களை தி சிம்ப்சன் தொடரில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து எதேச்சையாக நடந்ததா? அல்லது திட்டமிடப்பட்டதா? என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ