Zodiac Signs Are Going To Get Into Financial Trouble : ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளை சேர்ந்தவர்களும், தங்களின் கிரகப்பலன்களின் படி அவர்களின் வாழ்க்கை அமையும். அதன்படி, வரும் நாட்களில் நிதி சிக்கல்களை சந்திக்கும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள், பொதுவாகவே எப்போதும் நிதிச்சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர்களாக இருப்பார்களாம். இவர்கள் கைகளில் பணம் இருந்தால், என்ன செலவு செய்கிறோம், எதற்காக செலவு செய்கிறோம் என்பது குறித்த விழிப்புணர்வே இவர்களுக்கு இருக்காதாம். பணத்தை விரயம் செய்யாமல் சேமிக்க வேண்டும் என நினைத்தாலும், வரும் நாட்களில் இவர்களால் அதை செய்ய முடியாது என கூறப்படுகிறது. அதே போல, இவர்கள் அதிக செலவும் செய்வதால் நிதி சிக்கலில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் பணம் தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
கடகம்:
கடக ராசியை சேர்ந்த பலருக்கு ஆடம்பரமான ஆடைகள் மற்றும் கண்ணை பறிக்கும் விலைமதிப்பான பொருட்களின் மீது மோகம் அதிகமாக இருக்குமாம். இதற்காக இவர்கள் தங்கள் நிதி பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் செலவு செய்வார்களாம். அது மட்டுமன்றி, இவர்களை சுற்றி இருப்பவர்களுக்காக செலவு செய்வதாலும் இவர்கள் நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் இவர்கள் உறுதியற்று இருப்பதால் இவர்கள் தங்களின் வரவு மற்றும் செலவு குறித்தும் எப்போதும் கவலையோடு இருப்பார்களாம்.
மிதுனம்:
தேவையற்ற செலவு செய்யும் ராசிக்காரர்களுள் முதல் இடத்தில் இருப்பவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள், தான் செய்யும் செலவுகள் குறித்து பின்விளைவுகளை நினைத்து கூட பார்க்க மாட்டார்களாம். பிறரின் தூண்டுதலால் ஆடம்பர செலவு செய்யும் இவர்கள், கடன் வாங்கும் பழக்கமும் கொண்டவர்களாக இருப்பார்களாம். மேலும், இவர்களுக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும் என்பதாலும் அதை சுற்றியும் இவர்களின் செலவுகள் அதிகமாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியினர், அதிகமாக செலவு செய்யக்கூடாது என்ற எண்ணத்துடன் தங்களின் கையை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்வர். ஆனாலும், இவர்கள் செய்யும் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகுமாம். அதிலும், இவர்கள் செய்யும் அலட்சிய செலவுகள் மட்டும் ஏராளம் எனக்கூறப்படுகிறது. இது போன்ற செலவுகள் இவர்களை நிதி சிக்கல்களுக்குள்ளாக்குகிறதாம். அதே போல, நிதி பாதுகாப்பு குறித்து சிந்திக்காத இவர்கள், தான் செய்யும் செலவுகளின் பின்விளைவுகள் குறித்தும் கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லையாம்.
சிம்மம்:
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், தன்னிடம் இருக்கும் ஆடம்பர பொருட்களை பிறரிடம் காண்பித்து பெருமை பேச நினைப்பவர்களாக இருப்பார்களாம். இவர்கள், தனக்காக என்றில்லாமல் பல சமயங்களில் பிறரை கவருவதற்காக இது போன்ற ஆடம்பர பொருட்களை வாங்குவார்களாம். ஆடம்பரமான பொருட்களை வைத்திருந்தால்தான் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறோம் எனும் எண்ணம் கொண்ட இவர்கள், அதனை தக்க வைத்துக்கொள்வதர்காக பல வேலைகளை செய்வார்களாம். தன்னிடம் செலவு செய்ய காசு இல்லையென்றாலும் கூட, கடன் வாங்கி செலவு செய்ய இவர்கள் கொஞ்சம் கூட அஞ்சுவதில்லையாம். இதனால், பல சமயங்களில் இவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்கின்றனர்.
பொறுப்பு தூறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.'
மேலும் படிக்க | எத்தனை வயதானாலும் இளமை குறையாத 3 ராசிக்கார பெண்கள்! யார் தெரியுமா?
மேலும் படிக்க | பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறக்கும் ‘3’ ராசி பெண்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ