Hardik Pandya On Yash Dayal: கிரிக்கெட் சில நேரங்களில் கொடூரமாக இருக்கும் என கூறுவார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது, கடைசி ஐந்து பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதில், பலரும் ரிங்கு சிங்கை பாராட்டி தள்ளிய நிலையில், அந்த ஓவரை வீசிய குஜராத் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மாற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் அணியின் கண்டுபிடிப்புகளில் ஒருவரான தயாள், பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்தது மட்டுமல்லாமல், அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் கணிசமாக மோசமாக இழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த அந்த மோசமான நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும், அவர் தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, களத்தில் இறங்க தயாளின் நிலைமை இன்னும் ஏற்கத்தக்கதாக இல்லை என்றும், அவர் மீண்டு வருவதற்கு சற்று நேரம் எடுக்கலாம் என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத்தின் பெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு பின் ஹர்திக் பாண்டியா, ரிங்குவின் தாக்குதலுக்குப் பிறகு தயாள் உடல்நிலை சரியில்லாமல் 7-8 கிலோ எடையை இழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியின் போது தயாள் குறித்து விசாரித்தபோது,"யாஷ் தயாள் இந்த சீசனில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து என்னால் உறுதியாக கூற முடியவில்லை. அந்த போட்டிக்குப் பிறகு, (கேகேஆர் ஆட்டத்திற்கு பிறகு) அவர் நோய்வாய்ப்பட்டு 7-8 கிலோ எடையை இழந்தார். அந்த காலகட்டத்தில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர் எதிர்கொண்ட அழுத்தத்தின் காரணமாக, அவரது உடல்நிலை தற்போது களத்தில் இறங்க போதுமானதாக இல்லை. ஒருவரின் இழப்பு, நாளின் முடிவில் ஒருவரின் லாபம். அவரை களத்தில் பார்ப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும்" என்று ஹர்திக் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு யாஷ் தயாள் 9 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், 25 வயதான அவர் இந்த ஆண்டு போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாடிய மூன்று போட்டிகளில், அவர் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. மேலும், 15.83 என்ற எகானமி ரேட்டில் ரன்களை கொடுத்து வந்தார்.
கேகேஆர் போட்டியானது தயாளுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. யாஷ் தயாளின் தாய், அவரது தனது மகன் பந்துவீச்சில் ரிங்கு சிங் காட்டிய அதிரடியை கண்டு இரண்டு நாட்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. எவ்வாறாயினும், அவரது தந்தை வலுவாக இருந்து, தனது மகனுக்கு ஆதரவளித்து பேசினார்."விளையாட்டினால் உருவாக்கப்பட்ட தருணங்கள் இவை. வாழ்க்கையில் கூட, நீங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால், வலுவாக நிற்பது முக்கியம்" என்று யாஷின் தந்தை சந்திரபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ