ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா? என்ன செய்ய வேண்டும்?

ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 12:45 PM IST
  • ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு
  • லக்னோ, பஞ்சாப் அணிகள் தோற்க வேண்டும்
  • கடைசி 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்
ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா? என்ன செய்ய வேண்டும்? title=

ஐபிஎல் 2023 இதுவரை இல்லாத அளவுக்கு புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி போட்டிக்கு முன்பு வரை 10 அணிகளுக்குமே ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவி விட்டதால் முதல் அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மங்கிவிட்டது. இந்த இரண்டு அணிகளைக் கடந்து பார்த்தால் இப்போது 8 அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | IPL 2023: பிரப்சிம்ரன் சதத்தால் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளிய பஞ்சாப்... தொரும் டெல்லி துரதிருஷ்டம்!

ஆனால் அந்த அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், சில போட்டிகளில் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. முதலாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஒரு போட்டி மட்டுமே ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் ஆர்சிபி அணி இருக்கிறது.

அந்த அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 3 போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமின்றி லக்னோ அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில்  ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாக வேண்டும். லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை கடைசி இரு போட்டிகளில் எதிர்கொள்கிறது. 

அதேபோல், ஆர்சிபி அணிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஏதேனும் ஒரு அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்திக்க வேண்டும். இவை நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் படிக்க | RR vs RCB: பிளேஆப் பந்தயத்தில் முன்னேறுமா பெங்களூரு - ராஜஸ்தான் உடன் மோதல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News