அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 25வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணியை 154 ரன்களுக்கு மட்டுப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் 16.3 ஒவர்களில் 156/3 என்ற இலக்கை சுலபமாக வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் 2ம் இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 41 பந்துகளில், 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
Also Read | Michael Jordanஇன் காலணிகள் ஏலத்தில்! விலை என்ன தெரியுமா?
18 பந்துகளில் அரைசதம் எடுத்த பிருத்வி ஷா, ஐபிஎல் 2021-ன் அதிவேக அரை சதம் எடுத்தவர் என்ற சாதனைப் பதிவையும் நிகழ்த்தியுள்ளார். 42 ரன்கள் பவுண்டரி சிக்சர்களில் வந்தது. 41 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து கமின்ஸ் வீசிய பந்தில் ப்ருத்வி ஷாஅவுட் ஆகும் போது டெல்லி அணியின் வெற்றிக்கு 28 பந்துகளில் 9 ரன்கள் தான் தேவைப்பட்டது.
A morale-boosting win for @DelhiCapitals as they outplay #KKR to register a big 7-wicket win and they do so with 21 balls to spare. KKR could never recover after the early onslaught from @PrithviShaw. https://t.co/GDR4bTRtlQ #DCvKKR #VIVOIPL pic.twitter.com/fSBxxVkUBD
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
ஷிகர் தவானும் (46), பிரிதிவி ஷாவும் சேர்ந்து 13.5 ஓவர்களில் 132 ரன்களைச் சேர்த்தனர். தவான் 47 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் சிறப்பாக பங்களித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிடில் வரிசை நல்ல வலுவான நிலையில் இருந்தாலும் தொடக்க வரிசை சரியாக இல்லை என்பதை நேற்றைய ஆட்டம் நிரூபித்தது.
ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுக்க 38 பந்துகளை எடுத்துக் கொண்டார். முதல் 3 வீரர்கள் 67 பந்துகளுக்கு 77 ரன்களை எடுத்தனர்.
Also Read | தோனிக்கு பதிலாக வரப்போகும் CSK கேப்டன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR