IPL 2020: 99 ரன்களில் அவுட் ஆனாலும் வரலாறு படைத்த சாதனை நாயகன் Chris Gayle

டி 20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை முடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஏற்படுத்தினார் Chris Gayle. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 30, 2020, 11:26 PM IST
  • கெயில் ராஜஸ்தானுக்கு எதிராக 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
  • டி 20 வாழ்க்கையில் 1000 சிக்ஸர்களை முடித்தார் கெய்ல்
  • டி-20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடித்த அபூர்வ கெய்ல் என்று பெயர் பெற்றார் கிறிஸ் கெய்ல்.
IPL 2020: 99 ரன்களில் அவுட் ஆனாலும் வரலாறு படைத்த சாதனை நாயகன் Chris Gayle title=

துபாய்: ஐபிஎல் 2020 இன் 13 வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலின் அற்புதமான அதிரடி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஒற்றை ரன்னில் சதம் அடிப்பதை தவறவிட்டார் கெய்ல்.

அவர் எதிர்கொண்ட 63 பந்துகளில் எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 99 ரன்கள் எடுத்த கெய்ல், இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்தார். அதிக சிக்ஸர்கள் எடுத்தவர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார்.

அபுதாபியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையிலான போட்டியின் போது, கிறிஸ் கெய்ல் தனது பாணியில் பேட்டிங் செய்தார். அவரது ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறிப்போனார்கள்.  

Chris Gayle ராகுல் தெவதியாவின் ஓவரில் ஒரு சிக்ஸருடன் 33 பந்துகளில் அரைசதம் முடித்தார். இது அவரது ஐபிஎல் வாழ்க்கையின் 31 வது அரைசதம் ஆகும். இருப்பினும், கெயில் அதே ஓவரில் பந்தை தூக்கி அடித்தார். அவுட் ஆகிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், தியோடியா கேட்சைப் பிடிக்கத் தவறி, கோட்டை விட்டார். இதன் பின்னர், கெய்ல் தியாகியின் ஓவரில் தனது ஏழாவது சிக்ஸருடன், டி 20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்தார். இந்த நிலையை அடைந்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கெய்ல் பெற்றுள்ளார்.

இந்த போட்டிக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் 993 சிக்ஸர்கள் என்ற சாதனையை  வைத்திருந்தார். கெய்ல் 410 டி 20 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்துள்ளார். இப்போது அவர் 1001 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சிறப்புப் பதிவை வைத்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News