புது டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ -BCCI) இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல் -IPL) 13 வது சீசனை ஒத்திவைத்து. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் (Coronavirus Threat) அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டுக்காக தொடரை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) இடையே பிளாக்பஸ்டர் மோதலுடன் இந்த போட்டி மார்ச் 29 அன்று தொடங்க பிசிசிஐ (The Board of Control for Cricket in India) திட்டமிட்டு இருந்தது.
Also Read: கடந்த 13 ஆண்டுகளில் நான் கற்ற 3 தமிழ் வார்த்தை; மனம் திறக்கும் பியூஷ்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லி அரசு (Delhi Government) மாநிலத்தில் போட்டிகளை நடத்த ‘தடை’ செய்ய முடிவு செய்ததை அடுத்து இந்த முடிவு BCCI எடுத்துள்ளது.
முன்னதாக, மும்பையில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் (மைதானத்தில் யாரும் இல்லாமல் வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள்) போட்டிகளை நடத்த அனுமதிப்பதாக மகாராஷ்டிரா அரசு (Maharashtra Government) கூறியிருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் (COVID-19) நிலைமையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ - BCCI) ஏப்ரல் 15 வரை ஐபிஎல் 2020 (IPL 2020) தொடரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: IPL 2020 தொடரின் முழு அட்டவணையினை வெளியிட்டது BCCI...
ஏப்ரல் 15 வரை ஒரு சில உத்தியோகபூர்வ பிரிவுகளைத் தவிர அனைத்து விசாக்களையும் (Visa) இந்திய அரசு (Indian government) புதன்கிழமை ரத்து செய்தது. அந்த முடிவிற்குப் பிறகு, லீக்கில் உள்ள அனைத்து வெளிநாட்டு வீரர்களும் ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கு வர முடியாது. இதுவும் IPL 2020 போட்டியை தள்ளிவைக்க இதுவும் காரணமாகும்.