இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

Last Updated : Sep 30, 2017, 03:02 PM IST
இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி title=

இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்க போட்டியில் வெற்றிபெற்று புதிய உலக சாம்பியன் ஆனார்.

ஐல் ஆஃப் தி மேன் செஸ் தொடரின் 6-வது சுற்றில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 

இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஐல் ஆப் மேன் தீவில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதன் ‘மாஸ்டர்’ பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன், உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் என 160 பேர் கலந்து கொண்டனர். 

இதில், 6-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சேதுராமன் ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 51-வது நகர்த்தலின்போது வெற்றியைத் தழுவினார். 

ஆறு சுற்றுகளின் முடிவில் நார்வேயின் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் விதித் சந்தோஷ் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் 17 பேர் தலா 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

Trending News