IND vs SA; 1st Test: 30.5 ஓவர் இருந்த நிலையில் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 2, 2019, 04:15 PM IST
IND vs SA; 1st Test: 30.5 ஓவர் இருந்த நிலையில் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது title=

16:01 02-10-2019
இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததாலும், மைதானத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் , இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித் 115 ரன்னுடனும், மயங்க 84 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

 


15:17 02-10-2019
இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ரோகித் 115 ரன்னுடனும், மயங்க 84 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

 

 


13:40 02-10-2019
இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் மற்றும் மயங்க இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். இருவரும் அரைசதத்தை கடந்தனர். தற்போது ரோகித் சர்மா தனது டெஸ்ட் போட்டியின் நான்காவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவர் 154 பந்துகளில் சதம் அடித்தார். 54 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்கள் எடுத்துள்ளது.


11:34 02-10-2019
இந்திய அணியின் ஹிட்மேன் என அழைக்கப்படும் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது 11வது அரைசதத்தை டெஸ்ட் போட்டியில் பூர்த்தி செய்துள்ளார். இது இவரின் 28_வது டெஸ்ட் போட்டி ஆகும்.

 


11:30 02-10-2019
30 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான ரோஹித்* 52(84) மற்றும் மயங்க* 39(96) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். 

 

 


விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை விளையாடியது. முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 2வது போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டி-20 தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இன்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. முதல் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa) இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்த ஆட்டத்தில் ரிஷாப் பந்துக்கு பதிலாக விருத்திமான் சஹா (Wriddhiman Saha) விக்கெட் கீப்பிங் செய்வார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வீரர் அஸ்வின் (Ravichandran Ashwin) இடம் பெற்றுள்ளார்.

 

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால் (Mayank Agarwal) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) களம் இறக்கி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.

 

 

Trending News