Ind Vs SL: சதத்தை நோக்கி சண்டிமல்; ரன்களை குவிக்கும் இலங்கை!

பின்னர் மேத்திவ்ஸ் 111(268) ரன்களில் வெளியேற, சண்டிமல் தன் சதத்தினை நோக்கி 98(262) ரன்னில் களத்தில் உள்ளார்!

Last Updated : Dec 4, 2017, 02:41 PM IST
Ind Vs SL: சதத்தை நோக்கி சண்டிமல்; ரன்களை குவிக்கும் இலங்கை! title=

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் நாள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 

ஆரம்பத்தில் நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்தியா, பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

இதனால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 156(186) மற்றும் ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தினை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்தனர், பரபரப்பான ஆட்டத்தின் மூலம் ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் 108-வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.

எதிர்முனையில் இருந்த ரோகித்சர்மாவும் தன்பங்கிற்கு தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். பின்னர் தனது 65-வது ரன்னில் சந்தகன் சுழலில் சிக்கி வெளியேறினார். இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 500 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் களமிரங்கிய வீரர்கள் சொர்ப ரன்களில் வெளியேற கோலி 243(287) ரன்னில் வெளியேறினார். இதானால் இந்தியா 127.5 ஓவர் முடிய 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது!

அதன் பின்னர் களமிரங்கிய இலங்கை அணி வீரர்கள் கருணரத்னே 0(1), சில்வா 1(14) ரன்களில் வெளியேர பின்னர் களமிரங்கிய பெரேராவும் 42(54) ரன்னில் வெளியேறினார். 

எனினும் மேத்திவ்ஸ் மற்றும் சண்டிமல் தங்களது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 44.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை இலங்கை தொடர்ந்து விளையாடி வருகிறது. 

மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இலங்கை 71 ஓவர்கள் முடிய 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. மேத்திவ்ஸ் 90(194) மற்றும் சண்டிமல் 52(165) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் மேத்திவ்ஸ் 111(268) ரன்களில் வெளியேற, சண்டிமல் தன் சதத்தினை நோக்கி 98(262) ரன்னில் களத்தில் உள்ளார். அவருடன் சண்டீரா 4(15) ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை 102 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய ரன்னை எட்ட இன்னுன் இலங்கை 266 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News