ICC Test Rankings: ரூட் முதலிடத்தில்; விராட் கோலியை முந்தினார் ரோஹித்

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் ரூட்… கேப்டன் விராட் கோலியை முந்தினார் ரோஹித் ஷர்மா…

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2021, 09:11 AM IST
  • ICC தரவரிடைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் ரூட்
  • விராட் கோலி ஒரு இடம் பிந்தினார்
  • கோலியை முந்தினார் ரோஹித் ஷர்மா
ICC Test Rankings: ரூட் முதலிடத்தில்; விராட் கோலியை முந்தினார் ரோஹித் title=

ICC Test Rankings: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் ரூட்… கேப்டன் விராட் கோலியை முந்தினார் ரோஹித் ஷர்மா…

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசைகளை வெளியிட்டது. புதிய தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார்

 இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த ரூட், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் அரசராக மகுடம் சூடியிருக்கிரார். அவர் ஐ.சி.சி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் கேன் வில்லியம்சன்-ஐ (Kane Williamson) முந்தி, முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரூட் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் பின்னேற, அணியின் தொடக்க வீரர், ரோஹித் சர்மா அவரை முந்தியுள்ளார்.

ரோஹித் சர்மா இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், கேப்டன் கோஹ்லி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷ்கேன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களின் பட்டியலில், இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் முதல் ஐந்து இடங்களுக்கும் நுழைந்துவிட்டார். இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துவிட்டார். 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் இன்னும் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டித்தொடரில்  மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

READ ALSO | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News