ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2019, 02:52 PM IST
ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு title=

14:42 25-06-2019
லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இன்றைய 33 வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 


லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 32-வது லீக் ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். 

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நல்ல பார்மில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளியுடன் அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. இனி மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்புக்கு முன்னேறி விடும். 

இதுவரை இங்கிலாந்து அணி ஆடிய ஆறு ஆட்டங்களிலும் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளியுடன் அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. 2019 உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு அதிகமாக உள்ளது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. இன்றைய போட்டி முக்கிய போட்டியாகும். 

இவ்விரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 5 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான வெற்றி சதவிகிதம் ஆஸ்திரேலியா அணிக்கே அதிகம் உள்ளது. 

அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் 147 முறை மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 81முறையும், இங்கிலாந்து 61 முறையும், 2 போட்டிகள் டிரா ஆனது. 3 போட்டிகளில் முடிவு இல்லை.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்ச் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, நாதன் கூல்டர் நைல்.

இங்கிலாந்து: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Trending News