WATCH: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாடு திரும்பிய Team India-வுக்கு சென்னையில் அமோக வரவேற்பு

பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்ற இந்திய அணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Last Updated : Jan 21, 2021, 03:07 PM IST
  • டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.
  • வீரர்களுக்கு அபார வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கும்.
WATCH: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாடு திரும்பிய Team India-வுக்கு சென்னையில் அமோக வரவேற்பு title=

சென்னை: ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இந்தியா திரும்பியுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை சென்னைக்கு வந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இங்கு விளையாடும்.

இந்திய அணிக்கு அமோகமான வரவேற்பு

பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்ற இந்திய அணிக்கு (Team India) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

யார்கர் கிங் நடராஜனுக்கு தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள்

ஆஸ்திரேலிய தொடரில் மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமாகி தனக்கென தனி முத்திரை பதித்த டி. நடராஜனை (T Natarajan) வரவேற்க சின்னப்பம்பட்டியில் ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்டுள்ளன. மாலையில் சின்னப்பம்பட்டியின் சந்தைப்பேட்டையிலிருந்து அவரது வீடு வரை ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறினர். நடராஜனைக் காண பலர் அவரது வீட்டில் கூடியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: IND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்!!

பந்த் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

இந்தியா திரும்பியதும் ரிஷப் பந்த், “நாங்கள் கோப்பையை தக்கவைத்துக் கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொடரில் நாங்கள் ஆடிய விதத்தால் எங்கள் அணியும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.” என்று கூறியுள்ளார். பந்த் பிரிஸ்பேன் (Brisbane) டெஸ்டில் ஆடிய ஆட்டம் அந்த போட்டியை இந்திய அணி கைப்பற்ற பெரும் காரணமாக இருந்தது.

சென்னையில் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி

இங்கிலாந்துக்கு (England) எதிரான டெஸ்ட் தொடரின் 2 தொடக்க டெஸ்டுகளில் சென்னையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். முதல் போட்டி பிப்ரவரி 5 முதல் 9 வரையிலும் இரண்டாவது போட்டி பிப்ரவரி 13 முதல் 17 வரையிலும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: BCCI: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு ₹5 கோடி Bonus

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News