கங்குலி - விராட் கோலி விவகாரம்! கடுப்பான முன்னாள் கேப்டன்!

சவுரவ் கங்குலியாக இருந்தாலும் சரி, விராட் கோலியாக இருந்தாலும் சரி, பொது இடங்களில் மோசமாக பேசுவது நல்லதல்ல என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 16, 2021, 06:46 PM IST
கங்குலி - விராட் கோலி விவகாரம்! கடுப்பான முன்னாள் கேப்டன்! title=

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்கிய உள்ளது.  கேப்டன் பிரச்சினையில் பிசிசிஐ உடனான தனது கருத்து வேறுபாடுகளை விராட் கோலி சொல்லி இருக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

kapil

கடந்த புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில், டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலியை விலக வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலியின் தெரிவித்து இருந்தார்.  ஆனால் அப்படி ஒரு விவாதம் நடைபெறவில்லை என்றும், ஒன்னரை மணி நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது என்றும் கோலி உண்மையை போட்டுடைத்தார்.  இது கோஹ்லி மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே உள்ள கருத்து மோதலை அம்பலப்படுத்தியது.  இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், "இந்த நேரத்தில் விராட் இப்படி பொதுவெளியில் பேசி இருக்க வேண்டாம். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் வரவுள்ளது, தயவுசெய்து சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துங்கள்.  என்னதான் இருந்தாலும் கங்குலி பிசிசிஐ-ன் தலைவர், மேலும் இந்திய அணியின் கேப்டனும் மிகப்பெரிய பொறுப்பு தான்.     ஆனால் பொது இடங்களில் ஒருவரையொருவர் தவறாகப் பேசுவது, அது கங்குலி அல்லது கோலி யாராக இருந்தாலும் சரி என்று நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.   மேலும் யார் மீது தவறு இருந்தாலும் அதை நாங்கள் தெரிந்துகொள்வோம்.   ஆனால் சுற்றுப்பயணத்திற்கு முன் சர்ச்சையை ஏற்படுத்துவது சரியல்ல என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

kohli

கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, டிசம்பர் 26 அன்று செஞ்சூரியனில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  புதிய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தனது முழு ஆதரவையும் கொடுக்க உள்ளதாக கோலி உறுதியளித்துள்ளார்.

ALSO READ | விராட் கோலிக்கு ஆதரவு அளித்த பாகிஸ்தான்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News