வரும் IPL 2018 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் சாய்ராஜ் பத்துஹாலே நியமிக்கப்பட்டுள்ளார்!
இரண்டு ஆண்டு இடைகால தடைக்கு பின்னர் மீண்டும் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது. அதேப்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களத்தில் இறங்குகிறது. இவ்விரண்டு அணிகளும் சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான்கள் என்பதால் இந்த அணிகளின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் சாய்ராஜ் பத்துஹாலே நியமிக்கப்பட்டுள்ளார் என அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A big welcome to Sairaj Bahutule, Spin-bowling coach, Rajasthan Royals.
A seasoned Indian all rounder and a highly accomplished Ranji coach!
The Royals Family is immensely proud to have him as a part of the squad! ⚡️https://t.co/a9vNhUCiIe#HallaBol #Cricket #IPL2018 pic.twitter.com/5llGutqRXI
— Rajasthan Royals (@rajasthanroyals) February 27, 2018
சாய்ராஜ், மும்பை அணிக்காக 188 போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரியாக 26 விக்கெட்டுகளில் 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேவேலையில் 9 நாட்டிற்கு எதிரான போட்டிகளில் விளையாடி 6,176 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளை பொருத்தவரை, சாய்ராஜ் 2 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக வங்களா ராஞ்சி அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாய்ராஜ் தெரிவிக்கையில், "ராஜஸ்தான் அணியில் இணைவதில் மிகவும் பெருமை கொள்கின்றேன். அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடனும் இருக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மற்றம், அணித்தலைவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.