’ரிசல்ட் முக்கியம் பாஸ்’ ரோகித் - டிராவிட் ஆடும் ‘இன்-அவுட்’ ஆட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

ரோகித் மற்றும் டிராவிட் கூட்டணி ஆடும் இன்-அவுட் ஆட்டத்துக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 23, 2022, 11:40 AM IST
  • ரோகித் சர்மா - டிராவிட் கூட்டணியின் தோல்வி
  • இன் அவுட் விளையாட்டு விளையாடுவதாக அதிருப்தி
’ரிசல்ட் முக்கியம் பாஸ்’ ரோகித் - டிராவிட் ஆடும் ‘இன்-அவுட்’ ஆட்டத்துக்கு கடும் எதிர்ப்பு title=

ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இன் அவுட் ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன், பரிசோதனை என்ற பெயரில் அண்மைகாலத்தில் பல வீரர்கள் அணிக்குள் வருவதும், போவதுமாக இருக்கின்றனர். ஆனால், அதற்கான ரிசல்ட் இருக்கிறதா? என்றால் பெரிய கேள்விக்குறி தான் பதிலாக இருக்கிறது. ஆசிய கோப்பை தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரும் தோல்வியிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பலர் கேள்விகளை முன்வைத்துள்ளனர். 

அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு 

கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடிய அஸ்வினுக்கு, 8 மாதங்களுக்குப் பிறகே இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. திடீரென வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆசிய கோப்பையிலும் இடம்பிடித்த அவர், எதிர்வரும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு திறமை இருக்கும்பட்சத்தில் அவரை இந்திய அணியில் 8 மாதங்கள் சேர்க்காதது ஏன்? இப்போது அவரிடம் என்ன ஸ்பெஷலை கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும்.   

உமேஷ் யாதவுக்கு திடீர் அழைப்பு

இந்திய அணியில் திடீரென இடம்பிடித்திருப்பவர் உமேஷ் யாதவ். முகமது ஷமிக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டதால், அந்த வாய்ப்பு உமேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஓவர் கிரிக்கெட் விளையாடினார். எதிர் வரும் உலகக்கோப்பைக்கான அணியிலும் அவர் இல்லை. ரிசர்வ் பிளேயராக கூட அவர் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கையில் அவருக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ரவி பிஷ்னோய் வாய்ப்பு இல்லை

இளம் சுழற்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோய், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கி பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்தப்போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரிலும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படவில்லை. உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் பாபர் விக்கெட்டை எடுத்த ஒருவரை, எந்த காரணமும் இல்லாமல் அணியில் இருந்து நீக்கியது ஏன்? அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ரிஷப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக்

ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் எந்த போட்டியில் விளையாடுவார்கள், எந்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்பது போட்டிக்கு முன்பாக மட்டுமே தெரியும். அவர்கள் இருவரையும் மாறி மாறி அணிக்குள் கொண்டுவருவதும் வெளியேற்றுவதமாக இருக்கின்றனர். அதற்கேற்றார்போல் அவர்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஒரு போட்டியில் நன்றாக விளையாடும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட், அந்த ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் தொடருவதில்லை. 

புவனேஷ்வர் குமார் மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை?

டெத் ஓவர்களில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் புவனேஷ்வர் குமாருக்கு தொடர்ச்சியாக அந்த ஓவர்களையே கேப்டன் ரோகித் சர்மா வழங்குவதன் மர்மம் என்ன? என ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று போட்டிகளிலும் அவரின் டெத் ஓவர் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. இப்படி பல கேள்விகளுக்கு வெற்றி மட்டுமே பதிலாக இருக்கும் நிலையில், எதிர்வரும் போட்டிகளில் டிராவிட் - ரோகித் கூட்டணி அதனை பெறுமா? என்ற பெரிய கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி ஆவலோடு பதிலுக்கு காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க: Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

மேலும் படிக்க: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News