ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, கேவெமிக் ஆரி ஒளிப்பதிவு மற்றும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.
மேலும் படிக்க | வித்தியாசமான திரில்லர்! தருணம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
படத்தின் கதை
ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் இருவரும் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். ரவி மோகன் கர்நாடகாவில் தனது நண்பர்கள் மற்றும் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார். அதே சமயம் நித்யா மேனன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் நித்யா மேனன் டெஸ்ட்டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். ஆனால் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கும் ரவி மோகனின் ஸ்பேம்மில் இருந்து அந்த குழந்தை பிறக்கிறது. இதன் பிறகு என் ஆனது என்பதே காதலிக்க நேரமில்லை படத்தில் கதை.
நடிகர்கள் நடிப்பு
ஷ்ரியா என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் ரவி மோகனம் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மொத்த படத்தையும் இவர்கள் இருவரது பெர்பார்மன்ஸ் தான் தாங்கி பிடிக்கிறது. இவர்கள் இருவரில் நித்யா மேனன் இன்னும் சிறப்பாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஓகே கண்மணி படத்தில் வரும் கதாபாத்திரம் போல இருந்தாலும் தன்னுடைய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களை தவிர டிஜே பானு, லால், பாடகர் மனோ, வினோதினி ஆகியோர் தனியாக தெரிகின்றனர்.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி
இயக்குனர் கிருத்திகா உதயநிதி இன்றைய சமுதாயத்தில் இருக்கும் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப்பை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் படத்தில் பல முக்கியமான விஷயங்களை பற்றியும் பேசியுள்ளார். கே ரிலேஷன்ஷிப், குழந்தை வேண்டாம் என்று ஆண்கள், தனது குழந்தைக்கு அப்பாவை வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள் என இன்றைய சமுதாயத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை பற்றி பேசியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான முறையில் அணுகி உள்ளார்.
சித்தார்த் மற்றும் ஷ்ரியா முதன்முறையாக சந்தித்துக் கொள்ளும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தது. படம் முழுக்கவே காதலை வைத்து நகர்த்தி கொண்டு சென்றாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் சித்தார்த், ஷ்ரியா மற்றும் அவரது மகன் மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. படத்தில் நடித்திருந்த அந்த சிறுவனும் நன்றாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முறையான விளக்கம் கொடுத்துள்ளதால் அந்த கதாபாத்திரங்களின் மீது நாமும் டிராவல் செய்கிறோம்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது. ரகுமானின் இசை இந்த படத்தை சிறந்த ஒரு ராம்-காம் படமாக மாற்றுகிறது. படம் முழுக்கவே நகர வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் யாருக்கும் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை, இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு படம் பார்க்க நமக்கு ஏற்படவில்லை. காதலிக்க நேரமில்லை நிச்சயம் ஒரு உணர்வுபூர்வமான படம் என்றாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகமே.
மேலும் படிக்க | மதகஜராஜா திரைப்படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ