Reliance Jio... ரூ. 448 ரீசார்ஜில்... தினம் 2GB டேட்டா உடன் ... 12 OTT சேனல்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 13, 2025, 05:50 PM IST
  • ஜியோ நாடு முழுவதும் அதன் சிறந்த நெட்வொர்க் வசது மற்றும் இணைய வசதியை வழங்கும் நிறுவனம் என பெயர் பெற்றது.
  • டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டம்.
  • ஜியோவின் சிறந்த பொழுதுபோக்கு திட்டம்.
Reliance Jio... ரூ. 448 ரீசார்ஜில்... தினம் 2GB டேட்டா உடன் ... 12 OTT சேனல்கள் title=

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ நாடு முழுவதும் அதன் சிறந்த நெட்வொர்க் வசது மற்றும் இணைய வசதியை வழங்கும் நிறுவனம் என பெயர் பெற்றது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன. 

டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டம்

ஜியோவின் பல்வேறு வகை ரீசார்ஜ் திட்டங்களில்,  டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அதில் நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் 12 OTT செயலிகளின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகக்  அறிந்து கொள்வோம்.

ஜியோவின் சிறந்த பொழுதுபோக்கு திட்டம்

பயனர்களின் பல்வேறு வித தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான திட்டங்களும் ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கின்றன. ஜியோ தனது பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா மற்றும் இலவச OTT ஆப்ஸ் திட்டங்களை வழங்குகிறது. OTT ஆப்ஸில் ஆன்லைன் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால், இந்தத் திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு நன்மைகளை அள்ளித் தரும் ஜியோ திட்டத்தின் கட்டணம் ரூ. 448 மட்டுமே. இந்த திட்டத்தை நீங்கள் ஜியோவின் இணையதளத்தில் உள்ள பொழுதுபோக்கு திட்ட பிரிவில் காணலாம்.

ஜியோ திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் ரூ. 448 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. அதாவது நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். பயனர்கள் தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியையும் பெறுகின்றனர். இந்த திட்டத்தில், பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த வகையில் பயனர்கள் மொத்தம் 56 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முக்கிய செய்தி.... இன்னும் 2 நாள் தான் இருக்கு

12 OTT செயலிகளுக்கான இலவச சந்தா

உங்களிடம் 5G ஸ்மார்ட்போன் இருந்தால் மற்றும் உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் இருந்தால், நீங்கள் 5G இணையத்தையும் பயன்படுத்தலாம். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் Sony LIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV, JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | ஜியோ பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி... மிஸ்ட் கால் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஜியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News