ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசரசாரத்தை தொடங்கிய திமுக, எவ்வித விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம் என்றும், எந்தவித அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், நாம் தமிழர் போட்டியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5 ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
அமைச்சர் சு.முத்துசாமி
இதனிடையே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். பெரியார் நகர் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் கூட்டணிக்கட்சியினர் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி துண்டறிக்கைகளை வழங்கி திமுகவிற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை திமுக தலைவர் நிறைவேற்றியுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விதிமீறல்கள் இருக்கக்கூடாது
எவ்வித விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம் என்றும் எந்தவித அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டி இருக்கத்தான் செய்யும் என்றும். எனவே இதனை போட்டியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதாரணமாக பார்க்க முடியாது என்றார். தந்தை பெரியாரை சீமான் விமர்சித்திருப்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயம் தான். இதுகுறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் அமைச்சர் சு.முத்துசாமி. திமுகவை பொறுத்தவரை விதிகள் மீறப்படக்கூடாது என தலைவர் தெரிவித்தார்.
நேற்று பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் 48 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி கேட்க வேண்டும் என்பதால் நேற்று பிரச்சாரம் தொடங்கவில்லை என்றார். எடப்பாடி, அண்ணாமலை மற்றும் பிரேமலதா ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்ற தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "எங்களால் இப்படித்தான் வாக்கு கேட்க முடியும். வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்து என்று சொல்ல முடியுமா? வாக்குச்சாவடியில் சுதந்திரமாக வாக்கு செலுத்தும்போது எங்கள் மீது குற்றம் சொல்வது நியாயம் இல்லை. அவர்கள் எதிர்கட்சி என்பதால் எதாவது சொல்வார்கள். எனவே அவர்களை குறை சொல்லவில்லை. இதனை பொதுமக்கள் சரியா என்பதை பார்க்கட்டும்" என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க | மாட்டு பொங்கலில் உங்கள் வாசலை அழகுபடுத்தும் எளிமையான கோலங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ