பொங்கல் திருநாளில் சூரிய பகவான் மகர ராசிக்குச் சென்று பூச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். சூரிய பகவானின் இந்த இடப்பெயர்ச்சி குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு மங்களகரமான வாழ்க்கையாகவும், அதிர்ஷ்டம் அடிக்கும் நாளாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.
தை திருநாள் பொங்கல் நன்னாளில் ஜனவரி 14 தேதி இன்று சூரிய பகவான் சரியாக 8:44 மணிக்கு மகர ராசியில் நுழைந்தார். இதனால்தான் மகர சங்கராதி என்னும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் சூரியன் அருளைப் பெற்று அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் பற்றிப் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும். மனதில் நல்ல எண்ணத்தை விதைத்தாள் நல்லதே நடக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி பிரச்சினைகள் தீரும்.
மகர ராசிக்காரர்களுக்கு தை திருநாளாம் பொங்கல் திருநாளில் நல்ல செய்திகள் வந்தடையும். நீங்கள் பெரும்பாலும் யாரையும் நம்ப வேண்டாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்சனைகள் தீரும். வருமான ஆதாயங்கள் தேடி வரும் மற்றும் ஏதேனும் பணிகள் நிலுவையிலிருந்தால் சீக்கிரம் நல்ல செய்தி அதில் கிடைக்கும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு தைத்திருநாளாம் இந்த பொங்கல் திருநாள் சிறப்பான நாளாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏதேனும் எதிரிகள் வெல்லக் காத்திருந்தாள் நிச்சயம் அதற்கான நல்ல செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு அரசு வேலைக்குத் தயாராகும் உகந்த காலம் இதுதான். புதிய வருமான ஆதாயங்கள் கிடைக்கலாம் அல்லது புதிய வேலை வாய்ப்புகள் ஏதேனும் பெறலாம்.
தை திருநாளாம் பொங்கல் திருநாளில் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான இனிய நாள் என்றே சொல்லலாம். இவர்களுக்கு இந்த நாளில் நல்ல செய்திகள் கைக்கோடி வரலாம் அல்லது மங்களகரமான காரியங்கள் நடக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.