Los Angeles Fire Accident: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இன்று வரை வெறும் 15 சதவீதம் தீயை மட்டுமே கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சுமார் 7,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரச் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் கனடா, மெக்சிகோவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருகை தந்து விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்ட்டர்கள் மூலம் காட்டுத்தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, காற்றின் வேகம் காரணமாக காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர பின்னடைவு ஏற்படுகிறது.
நேற்று(ஜன.12) வரை பலி எண்ணிக்கை 16ஆக இருந்த நிலையில், இன்று(ஜன.13) 24ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பலரை காணவில்லை.
மேலும் படிங்க: ஈரோடு இடைதேர்த்தலில் பாஜக போட்டி இல்லை! காரணம் இதுதான்!
இயற்கை உதவினால் விரைவில் கட்டுப்படுத்தலாம்
நாளை மறுநாள்(ஜன.15) வரை காற்று மணிக்கு 80 கி.மீ. முதல் 113 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் இயற்கை உதவி மழை பொழிந்தால் மட்டுமே விரைவில் தீயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரமாகியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த காட்டுத் தீ பாலிசேட்ஸ், ஈடன், கென்னத் மற்றும் ஹர்ஸ்ட் என சுமார் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குப் பரவி எரிந்துள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. காற்று தொடர்ந்து வீசுவதால் தீயை அணைக்க 70 கூடுதல் தண்ணீர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,50,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். 70,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்
இந்த காட்டுத் தீயால் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். முன்னெச்சரிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் காட்டுத் தீயை அணைக்க அதிகம் தண்ணீர் தேவைப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காட்டுத் தீயால் எரிந்த வீடுகளுக்குக் காப்பீடு நிறுவனங்களிடம் இழப்பீடு வழங்கக் கோரி விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் இழப்பீடு மூன்றில் ஒரு பங்கு தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது எனத் தெரிவித்தனர்.
மேலும் படிங்க: 2025 ஐபிஎல்-லில் வரவுள்ள கடுமையான மாற்றங்கள்! ஐசிசி விதிகள் பின்பற்றப்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ