இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை தொடர் 2019-ல் ரவுண்ட் ராபின் சுற்றுகள் முடிவடைந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி வரும் ஜூலை 14 ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சில் போராடிய ஆஸ்திரேலியா அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் குவித்தது.
அணியில் அதிகப்பட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 85(119) ரன்கள் குவித்தார். அலெக்ஸ் கேரி 46(70) ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கயது. துவக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் 85(65) ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தார். அவருக்கு துணையாக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோவ் 34(43) ரன்கள் குவித்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்த களமிறங்கிய ஜோ ரூட் 49*(46), மோர்கன் 45*(39) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. ரும் 14-ஆம் நாள் நடைபெறுள்ள உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.