INDvsNZ, 3rd T20I: 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி

நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடித் தோற்றது. 

Last Updated : Feb 10, 2019, 09:00 PM IST
INDvsNZ, 3rd T20I: 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி title=

நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடித் தோற்றது. 

இந்தியா - நியுசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றன. தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியுசிலாந்து அணியின் தொடக்கம் அட்டகாசமாக இருந்தது. டிம் ஸீபெர்ட், காலின் மன்ரோ அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

ஸீபெர்ட் 43 ரன்களும், காலின் மன்ரோ 72 ரன்களும் சேர்த்தனர். பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், கிராந்தோம் ஆகியோரும் தங்கள் பங்குக்கு விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்கத்திலேயே ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா, விஜய் சங்கர் அதிரடி காட்டினர். விஜய் சங்கர் 43 ரன்கள் குவித்தார். 

இதை அடுத்து இந்தியாவின் விக்கெட்டுகள் சீராக சரிந்தன. மகேந்திரசிங் தோனியும் கைவிட்டார். தினேஷ் கார்த்திக், க்ருணல் பாண்ட்யா கடுமையாகப் போராடினர். ஆனால் இந்திய அணியால் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2க்கு1 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை நியுசிலாந்து கைப்பற்றியது.

 

Trending News