இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கெய்ல் 2011 முதல் 2017 வரை ஆர்சிபிக்காக விளையாடி வந்தார்.
"எனது நல்ல நண்பரான கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல், யுனிவர்ஸ் பாஷை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவரை ஆர்சிபி அணியில் எடுத்ததில் இருந்து எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது. சிறந்த நட்சத்திர வீரர் கெயில்" விஜய் மல்லையா கூறியுள்ளார்.
Great to catch up with my good friend Christopher Henry Gayle @henrygayle , the Universe Boss. Super friendship since I recruited him for RCB. Best acquisition of a player ever. pic.twitter.com/X5Ny9d6n6t
— Vijay Mallya (@TheVijayMallya) June 22, 2022
மேலும் படிக்க | இந்திய அணியில் 6 கேப்டன்கள் உள்ளனர்: பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!
மல்லையா பதிவிட்டதில் இருந்து இந்த ட்வீட் 13,000க்கும் மேற்பட்ட 'லைக்குகள்' மற்றும் 500 ரீட்வீட்களை பெற்றுள்ளது. கெய்ல் 2009 மற்றும் 2010-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு 2011-ல் ஆர்சிபியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார், அதன்பின் ஐபிஎல்லில் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவராக உருமாறினார். ஆர்சிபி அணிக்கு பிறகு சிறிது காலம் கெயில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இருப்பினும், ஐபிஎல் 2022 ஏலத்தில் அவர் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
கெய்ல் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 148.96 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 4965 ரன்கள் மற்றும் சராசரியாக 39.72 எடுத்துள்ளார். 2013-ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் அடித்து டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023ல் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கிரிக்கெட் விளையாடபோன இடத்தில புட்பால் விளையாடிய இந்திய வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR