CSK IPL 2024: கான்வே, பத்திரனாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்!

Chennai Super Kings: ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Mar 19, 2024, 06:58 AM IST
  • ஐபிஎல் 2024க்கு முன்னதாக தொடரும் சிக்கல்.
  • நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காயம்.
  • உடனே மீண்டு வருவது சந்தேகம்.
CSK IPL 2024: கான்வே, பத்திரனாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! title=

Chennai Super Kings: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் 2024ன் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது.  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகிறது.  இந்த போட்டி எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 5வது பட்டத்தை வென்ற சென்னை அணி, இந்த முறை 6வது பட்டத்தை வெல்ல தயார் ஆகி வருகிறது.  இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் அவருக்காக சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் முதல் சென்னை அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடி! 2 ஸ்டார் பவுலர்கள் காயம்

இருப்பினும், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணி வீரர்கள் பலர் காயங்களில் சிக்கி உள்ளனர். தற்போது அதில் ஒருவராக பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் இணைந்துள்ளார். சட்டோகிராமில் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பங்களாதேஷ் அணியின் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், 42வது ஓவரில் பந்து வீச வந்தபோது கடுமையான தசைப்பிடிப்புக்கு உள்ளானார். அவரால் அதனை தொடர்ந்து தரையில் நிற்க கூட முடியவில்லை. முஸ்தாபிசுர் ரஹ்மான் அந்த ஓவரின் கடைசிப் பந்தை வீசும்போது தரையில் விழுந்தார். பின்னர் நடிக்க முடியாத காரணத்தால் மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் மீண்டும் பந்து வீச வந்தார் முஸ்தாபிசுர் ரஹ்மான். இருப்பினும் அவரால் எதிர்பார்த்தபடி பந்தை வீச முடியவில்லை, பிறகு போட்டியில் தொடர முடியாது என்று முடிவெடுத்தார்.

CSKவில் தொடரும் காயம்

முஸ்தாபிசுர் ரஹ்மானை சென்னை அணி கடந்த ஆண்டு மினி ஏலத்தில் எடுத்து இருந்தது.  சென்னை அணிக்கு டெத் ஓவர்கள் வீச சரியான வீரர்கள் இல்லாத நிலையில் ரகுமான் கைகொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஆகி உள்ளது. இவரை தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பிளேயர் டெவோன் கான்வே கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாதி போட்டிகளால் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.  மேலும் இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் சரியாக நான்கு முதல் ஐந்து வாரங்கள் ஆகும்.

"மதீஷா பத்திரனா எப்போது வருவார் என்பதை அறிய நாங்கள் ஸ்ரீலங்கா அணியுடன் பேச வேண்டும். அவர் எங்கள் அணியின் முதன்மையான பந்துவீச்சாளர்களில் ஒருவர், எதிர்பாராத விதமாக இப்படி நடக்கின்றன” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பத்திரனாவிற்கு மாற்று வீரராக முஸ்தாபிசுர் ரஹ்மான் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவரும் காயம் அடைந்துள்ளார்.  ஐபிஎல் 2024 ஏலத்தில் 2 கோடிக்கு சிஎஸ்கே அவரை வாங்கியது. இருப்பினும், அவரது காயத்தின் தீவிரம் குறித்து இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | விராட் கோலி வேண்டுமென ஜெய்ஷாவிடம் மல்லுக்கட்டிய ரோகித் சர்மா! 20 ஓவர் உலக கோப்பை அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News