3 மாத தவிப்புக்கு பின் சொந்த வீடு திரும்பும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள்...

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முழு அடைப்பு காரணமாக பெங்களூருவில் சிக்கி இருந்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தற்போது தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

Last Updated : Jun 22, 2020, 08:41 AM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முழு அடைப்பு காரணமாக இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மையத்தில் சிக்கிக்கொண்டனர்.
  • முழு அடைப்பிற்கு முன்பு, இந்த வீரர்களின் முகாம் வரவிருக்கும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒலிம்பிக்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக இந்த வீரர்களால் பெங்களூரில் நீண்ட காலம் பயிற்சி பெற முடியவில்லை.
3 மாத தவிப்புக்கு பின் சொந்த வீடு திரும்பும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள்... title=

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முழு அடைப்பு காரணமாக பெங்களூருவில் சிக்கி இருந்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தற்போது தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா(Coronavirus) வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முழு அடைப்பு காரணமாக இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மையத்தில் சிக்கிக்கொண்டனர். முழு அடைப்பிற்கு முன்பு, இந்த வீரர்களின் முகாம் வரவிருக்கும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒலிம்பிக்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக இந்த வீரர்களால் பெங்களூரில் நீண்ட காலம் பயிற்சி பெற முடியவில்லை.

கொரோனா விவரங்களை மறைப்பதால் நற்பெயர் வாங்க முடியாது - ஸ்டாலின்!...

கடந்த 3 மாதங்களாக பெங்களூரில் சிக்கித் தவித்து வந்த இந்திய ஹாக்கி அணியின் வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு மாத விடுமுறை வழங்கப்பட்டது மற்றும் அனைத்து வீரர்களும் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைகப்பட்டனர். இதன் காரணமாக இந்த விடுமுறை காலத்தினை அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தினருடன் செலவழிக்க முடியும்.

நாடு முழுவதும் முழு வீச்சில் பரவி வந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பூட்டுதல் அறிவிக்கப்பட்டபோது, ​​மார்ச் 25 முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி வீரர்கள் தெற்கு பெங்களூரில் உள்ள SAI-ன் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்..!

இந்நிலையில் தற்போது கொரோனா பதற்றம் அதிகரிக்கும் நிலையில் வீரர்களுக்கு ஒரு மாத விடுப்பு அளிக்கப்பட்டு, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல வீரர்கள் பயணத்தின் தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். 

Trending News