அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்

சிவ பூஜையில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அனைத்தும் அகன்று தோஷங்கள் மறைந்து, சிவபெருமானின் அருள் பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 18, 2022, 09:14 AM IST
  • வில்வ இலைகள் இல்லாமல் சிவ பூஜை முழுமை அடையாது.
  • அனைத்து தோஷங்கள் மறைந்து, சிவபெருமானின் அருள் பார்வை கிடைக்கும்.
  • வில்வ இலைகளை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும்
அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும் title=

வில்வம் இலைகளைப் பற்றி புராணக்கதைகள் உள்ளன. புகழ்பெற்ற பில்வாஷ்டகம் எனும் சிவ பெருமானுக்கான ஸ்தோத்திரத்தில் வில்வ இலையின் சிறப்புகளையும், சிவபெருமானின் விருப்பத்திற்கு உகந்ததாக கருதப்படும் காரணத்தையும் விவரிக்கிறது. வில்வ இலைகள் இல்லாமல் பூஜை முழுமை அடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.சிவ பூஜையில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அனைத்தும் அகன்று தோஷங்கள் மறைந்து, சிவபெருமானின் அருள் பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வில்வ இலைகளை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம்.

இந்த இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலையின், மூன்று இலைகள், திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை குறிக்கின்றது. மூன்று இலைகளும் மகாதேவனாகிய சிவனின் மூன்று கண்கள், அவர் ஏந்தும் ஆயுதமான திரிசூலத்தைக் குறிப்பதாக கருதப்படுகின்றன.

மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 

ஆதி தேவனான சிவ பெருமானை மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமும், நீரின்பால் அபிஷேகம் செய்வதன் மூலம் மகிழ்விக்கலாம். அதோடு சிவன் வழிபாட்டில் வில்வ இலைகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.

சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகளை தூவி பூஜிக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வில்வ இலைகள் 3, 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சிவபெருமானுக்கு இரட்டை படை எண்ணிக்கையிலான வில்வ இலைகளை அர்பணிக்க கூடாது.

ஒற்றைப்படை எண்ணிக்கையிலான வில்வ இலைகயை தண்ணீரில் போட்டு, அதில் சிறிது கங்கை நீரை சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வில்வ இலைகளை வெளியே எடுத்து இலைகள் மீது சந்தனத்தால் 'ஓம்' என்று எழுதவும். சிவன் மீது ஓம் என சந்தனத்தால் எழுதப்பட்ட இலைகளை அர்ப்பணம் செய்தால், ச்வன் மகிழ்ந்து, வாழ்க்கையின் அனைத்து இன்னல்களும் தீரும்.

மேலும், சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகளால் கோர்க்கப்பட்ட மாலையைச் செய்து அதை சாற்றலாம். இதனால் சிவபெருமான் மகிழ்ந்து , உங்கள் மன ஆசைகள் நிறைவேறும். சிறந்த பலன் கிடைக்கும். அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News