IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

Written by - RK Spark | Last Updated : Jun 29, 2024, 11:17 AM IST
  • இன்று நடைபெறும் இறுதி போட்டி.
  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.
  • இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்? title=

India vs South Africa ICC T20 World Cup 2024 final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று சனிக்கிழமை ஜூன் 29ம் தேதி மோதுகின்றன. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியும் ஐசிசி கோப்பையை வென்று 10 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் இரண்டு பேரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவு வருகிறது. இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ரோபியை வென்றது.

மேலும் படிக்க | Ball Tamper செய்தது வெற்றி... இந்தியாவை குறை சொல்லும் பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்கா அணி கடந்த 1998 முதல் ஐசிசி பட்டத்தை வென்றதில்லை. மேலும் இதுவரை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவர்கள் விளையாடியதில்லை. இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டி உலகக் கோப்பை வரலாற்றில் அவர்கள் விளையாடும் முதல் இறுதி போட்டியாகும். இந்த இரண்டு அணிகளும் இந்த 2024 டி20 உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையவில்லை. இன்றைய இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கி பார்படாஸில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மழை குறுக்கீடு இருக்குமா என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும் என்றும் யோசித்து வருகின்றனர்.

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் கொடுக்கப்படவில்லை. ஆனால் பைனல் போட்டிக்கு ரிசர்வ் நாள் கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை இன்று போட்டியை நடத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். இன்றைய தினத்தில் 10 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்படும். ரிசர்வ் நாளிலும் விளையாட முடியாவிட்டால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு இரண்டு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும். கடைசியாக 2002ல், இந்தியாவும் இலங்கையும் சாம்பியன்ஸ் டிராபியை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

இந்த சீசன் முழுவதும் ஷிவம் துபே பேட்டிங்கில் சிரமப்பட்டு வருகிறார். கடந்த அரையிறுதியில் கூட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில் அணியில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்திய அணி இதே பிளேயிங் 11 உடன் வெற்றி பெற்று இருப்பதால் அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவம் துபே தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த சீசனில் இந்திய அணி சிராஜ்க்கு பதிலாக குல்தீப்பை மட்டுமே அணியில் எடுத்துள்ளது. இதுதவிர எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.

மேலும் படிக்க | IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News