இன்னும் ஓடிடியில் வெளியாகாத 150 கோடி வசூலித்த படம்! எது தெரியுமா?

150 கோடி வசூல் செய்த ஒரு திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. அது எந்த படம் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2024, 01:37 PM IST
  • 150 கோடி வசூலித்த படம்
  • இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை
  • எந்த படம் தெரியுமா?
இன்னும் ஓடிடியில் வெளியாகாத 150 கோடி வசூலித்த படம்! எது தெரியுமா?   title=

கொராேனா காலத்திற்கு பிறகு, ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால் பல படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளிவர ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், ஒரு சில படங்கள் எவ்வளவு கோடி கலெக்ட் செய்திருந்தாலும் ஓடிடியில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுகிறது. அப்படி வெளிவராத ஒரு படம் என்ன தெரியுமா? 

ஆடுஜீவிதம்:

மலையாள திரையுலகின் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்று, ஆடுஜீவிதம். பென்யாமின் எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில், பிருத்விராஜ் ஹீராேவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இந்த படத்தை கிட்டத்தட்ட 16 வருடங்கள் எடுத்தனர். 

அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தியர்கள் பலர், தற்போது வரை வேலைக்காக துபாய் உள்ளிட்ட கல்ஃப் நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதில், மலையாளிகள்தான் அதிகம். அப்படி, ஒரு நிறுவனத்திற்கு வேலைக்காக சன்று, தவறுதலாக பாலைவனத்தில் மாட்டிக்கொள்ளும் நஜீப் என்ற இளைஞனை பற்றிய படம் இது. இந்த படத்திற்காக கடும் சிரமப்பட்டு உடல் அமைப்பை மாற்றிய பிருத்விராஜ், இரண்டு நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்திருக்கிறாராம்.  இவ்வளவு உழைப்பை போட்டு எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

ஓடிடியில் வெளியாகவில்லை..

ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கு முன்னர் வெளியாகியிருந்த படங்களும், அதன் பின்னர் வெளியான படங்களும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டன. ஆனால், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சுமார் ரூ.86 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம், கடைசியாக ரூ.158 கோடி வரை கலெக்ட் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 

என்ன காரணம்?

வழக்கமாக, எந்த படம் வெளிவந்தாலும் அதன் ரிலீஸிக்கு முன்னதாகவே டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் விற்கப்படும். ஆனால், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் இன்னும் எந்த நிறுவனத்திற்கும் விற்கப்படவில்லையாம். காரணம், ஆடு ஜீவிதம் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதன் பிறகுதான், படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படம் என் வாழ்க்கையின் அங்கம் - நடிகர் பிருத்விராஜ்!

Aadujeevitham

எந்த தளத்தில் வெளியாகும்?

பெரும்பாலான மலையாள படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளம்தான் வெளியிட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி உரிமமும் இதன் கையில்தான் இருப்பதாக சொல்லப்பட்டது. மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியான இந்த படம், மே மாதம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதன் பிறகு ஓடிடியில் விற்கப்பட்டால், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளமே இதை வாங்கிக்கொள்ளும் எனக்கூறப்படுகிறது. 

உண்மைக்கதை..

ஆடுஜீவிதம் திரைப்படம், உண்மைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட கதையாகும். கேரளாவை சேர்ந்த நஜீப், 90களில் கல்ஃப் நாடுகளுக்கு வேலைக்கு சென்று பாலைவனத்தில் மாட்டிக்கொண்டார். அங்கேயே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இருந்தார். தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவர் சொன்ன அனுபவத்தை வைத்துதான் பென்யாமின் ஆடுஜீவிதம் புத்தகத்தை எழுதினார். இது, 2007ஆம் ஆண்டு வெளியானது. இதை வைத்துதான், இப்படமும் பின்னாளில் உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க | பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படம்! மிரட்டலாக வெளியான டிரெய்லர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News