சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோ

Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம்? யார் சவால்களை எதிர்கொள்வார்கள்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Sani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் இன்று நள்ளிரவு,  கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் நவம்பர் 15 அரை, சுமார் 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பழைய தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு புதிய விஷயங்களை நல்ல விதமாக செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2 /13

ரிஷபம்:  சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். முக்கியமான பணிகளில் தடைகள் வரக்கூடும். உங்கள் பணியிடத்தில் கவனத்தை சிதற விடாதீர்கள். மாற்றத்திற்கு அச்சம் கொள்ளாமல் பயணிக்கவும். பொறுப்புகளை ஒழுங்காக கவனியுங்கள். பண விஷயத்தில் எந்த ஆபத்தான விஷயங்களையும் செய்ய வேண்டாம்.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிவக்கிரப் பெயர்ச்சி பெரிய மாற்றங்களை கொண்டு வரும். நிதி நிலையில் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் செலவுகளை சற்று கட்டுப்படுத்துவது நல்லது. வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். தேவையற்ற செயல்களை குறைத்தால் நன்மை உணாகும்.

4 /13

கடகம்: சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் கடக ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். புதிய உத்திகளை இப்பொழுது முயற்சி செய்து பார்க்கலாம். முதலீட்டிலும் கவனம் செலுத்தலாம். இந்த காலத்தில் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

5 /13

சிம்மம்: தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பது நல்லது. களத்தில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணிகள் நிறைவடைவதில் சற்று தாமதம் ஏற்படலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

6 /13

கன்னி: சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் இலக்குகளை அடைவதில் முழு முனைப்புடன் வேலை செய்வீர்கள். சில தடைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். கடின உழைப்பால் அந்த தடைகளை தகர்த்தெறிவீர்கள். அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் சேர்ந்து பணி புரிவது நல்லது.

7 /13

துலாம்: சனி வக்ர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம். எந்தவித முடிவை எடுப்பதற்கு முன்பும் பல குழப்பங்கள் ஏற்படலாம். நினைத்த காரியங்களை முடிப்பதில் சில தடைகள் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். நிதிநிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

8 /13

விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆக்கபூர்வமாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனினும் மிகுந்த உத்வேகத்துடன் அனைத்து வேலைகளிலும் செயல்படுவீர்கள். புதிய வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஏற்ற நேரமாக இருக்கும்.  

9 /13

தனுசு: சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். வாழ்வில் சில தடைகள் வரும். பிறரிடம் பேசும் பொழுது உங்கள் கருத்தை பொறுமையுடனும் நிதானத்துடனும் எடுத்து வையுங்கள். செலவு செய்வதற்கு முன் பலமுறை யோசித்து பின்னர் செய்வது நல்லது.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்கிரப் பெயர்ச்சி பல ஏற்ற இறக்கங்களை கொண்டு வரும். உங்கள் பணியிடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வெற்றிகரமாக செயல்களை முடிக்க உங்களுக்கு பொறுமை அவசியமாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும்.

11 /13

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான பலவித வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வெற்றிப் பாதையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நீங்கள் விரும்பிய பலன்களை பெறுவீர்கள். எனினும் நிதி நிலையில் சிறிய ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளலாம். உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

12 /13

மீனம்: சனி வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இத்தனை நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.