ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.

7th Pay Commission: ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும்.

1 /9

7வது சம்பள கமிஷனின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி உள்ளது. ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான ஒரு அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /9

இந்த முறையின் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுக்களின் படி, அடுத்த மூன்று மாதங்களில் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, புதிய அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் ஏற்படும். இது அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கும்.

3 /9

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டெய்லி இந்தியா ப்யூரொ அறிக்கையில், இதுவரையிலான கணக்கீடுகளின்படி, பணவீக்கக் குறியீட்டில் 52.43 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீடு ஜூலை 31, 2024க்குள் நிறைவடையும். இதில் நல்ல எழுச்சி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

4 /9

அடுத்த நிதியாண்டில் நல்ல அகவிலைப்படி உயர்வும் ஊதிய உயர்வும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஊழியர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும். இந்த முடிவை எடுக்க, ஜூலை 2024 வரையிலான தரவுகள் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் வகையில் தயாரிக்கப்படும்.  

5 /9

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்படுகின்றன. இதன் கீழ் ஜனவரி 2024 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் டிஏ 4% அதிகரிக்கப்பட்டது.

6 /9

அகவிலைப்படி குறித்து, துறை அதிகாரிகள், "அகவிலைப்படி அரசு ஊழியர்களின் கொடுப்பனவுகளை மேம்படுத்துவதோடு அவர்களின் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகளின் அடிப்படையில், இது திருத்தப்படும்" என கூறினார்கள். 

7 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும்.

8 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரம் இதுதான்: 7வது ஊதியக்குழு அகவிலைப்படி சதவிகிதம் = [{AICPI-IW (அடிப்படை ஆண்டு 2001=100) -இன் கடந்த 12 மாதங்களின் சராசரி – 261.42}/261.42×100]

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.