These 5 Zodiac Signs Are Skilled At Lying : ஒரு சில பேர், எந்த சிரமமும் படாமல் மிகச்சுலபமாக பொய் கூறுவர். அது பொய்தான் என்று கூட நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி, இருக்கும் 12 ராசிகளுள் 5 ராசிகள் மிகச்சுலபமாக பொய் கூறுவார்களாம். அவர்கள் யார் தெரியுமா?
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள், பிறரிடம் பேசுவதிலும் மற்றவர்களை பற்றி தெரிந்து கொள்வதிலும் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம். இந்த திறன்களை வைத்து, இவர்கள் ஆதாயம் பார்த்துக்கொள்வதாக சில கணிப்புகள் கூறுகின்றன. பிறருக்கு அல்லது தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வார்களாம். இதனால் இவர்களுக்கு பொய் கூறுவதும் கைவந்த கலையாக இருக்கிறது. தங்களின் வார்த்தைகள் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் இவர்கள் பிறரை நன்றாக ஏமாற்றுவார்களாம்.
துலாம்:
துலாம் ராசியை சேர்ந்தவர்கள், பிறரை வசீகரிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம். இதனால், இவர்கள் சொல்வதை அனைத்தும் கேட்பவர்கள் அப்படியே நம்பி விடுவர் என கூறப்படுகிறது. பொய் கூறவில்லை என்றாலும் கூட, இவர்கள் பல சமயங்களில் உண்மையை பிறரிடம் இருந்து மறைத்து விடுவார்களாம். அது மட்டுமன்றி, தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் இவர்கள் எந்த எல்லைக்கும் சென்று, எது வேண்டுமானாலும் கூறுவர் என சொல்லப்படுகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள், தன்னிடம் என்ன ரகசியம் இருந்தாலும் அதை சாகும் வரை யாரிடமும் கூற மாட்டார்களாம். இந்த ரகசியம் பல சமயங்களில் பிறருக்கு தெரியவிடாமல் தடுக்க பல பொய்களை கூறுவார்களாம். இதனால் இவர்கள் பிறரை ஏமாற்றவும் செய்வராம். இவர்களை பார்க்கும் போது, ஏதோ ஒரு மர்மமான எனர்ஜி இவர்களிடம் தோன்றிக்கொண்டே இருக்குமாம். இவர்கள் என்ன யோசிக்கின்றனர் என்பதை பிறரால் கணிக்க கூட இயலாது என கூறப்படுகிறது.
தனுசு:
தனுசு ராசியை சேர்ந்தவர்கள், எப்போதும் சாகச விரும்பிகளாகவும் த்ரில் அனுபவம் வேண்டும் எனவும் நினைப்பார்களாம். தன்னை சுற்றி இருப்பவர்களும், அதே போல இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்களாம். அதே போல, தன்னை சுற்றி இருப்பவர்களும் அதே போன்றவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, உண்மையை வெளிப்படையாக கூறாமல் அதனை கொஞ்சம் வளைத்து-உடைத்து கூறி விடுவர். அல்லது, நேரடியான உண்மையை கூறாமல், கட்டுக்கதைகளையும் பொய்களையும் கூறுவர். பிறர், தன் மீது நல்ல அபிப்ராயத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யும் விஷயம் இது.
மீனம்:
மீன ராசிக்காரர்கள், கலைத்துறையில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்களாம். இவர்களில் பலர் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கற்பனை குதிரைகளை ஓட விடுபவர்களாகவும் இருப்பார்களாம். இது, அவர்களின் தொழில் அல்லது வேலையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருப்பார்களாம். பிறரிடம் பேசும் போது 50% உண்மையும், 50% பொய்யும் இருக்குமாம். பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் இவர்கள், அந்த புரிந்துணர்வை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டு பொய் கூறுவராம். அது மட்டுமல்ல, பிறர் மனது புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இவர்கள், பொய் கூறுவர் எனக்கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ