சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்தியாவின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது என பிசிசிஐ மறுத்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jan 21, 2025, 06:10 PM IST
  • இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது - பிசிசிஐ
  • ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
  • சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது
சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்!  title=

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கு மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் பாகிஸ்தான் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

2027 வரை பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது

இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி இந்திய சென்று விளையாடா மாட்டார்கள் என அறிவித்தது. இது ஒருபக்கம் இருக்க, சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன் அணி கேப்டன்கள் பாகிஸ்தான் சென்று கோப்பையுடன் குழு புகைப்படம் எடுக்க உள்ளனர். 

இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. 

மேலும் படிங்க: VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!

புதிதாக கிளம்பிய பிரச்சனை

இந்த நிலையில், புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது. பொதுவாக ஐசிசி தொடர் எந்த நாட்டில் நடக்கிறதோ, ஐசிசி லோகோவுடன் தொடரை நடத்தும் நாட்டின் பெயரும் இடம்பெறும். அப்படி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஜெர்சியில் ஐசிசி லோகோவுடன் பாகிஸ்தான் பெயரும் இடம்பெற உள்ளது. 

இச்சூழலில் பாகிஸ்தான் பெயர் இல்லாத ஜெர்சியைத்தான் இந்திய அணி வீரர்கள் அணிவார்கள். நாங்கள் துபாயில் தான் விளையாடுகிறோம். பாகிஸ்தானில் அல்ல. அப்படி இருக்கையில் பாகிஸ்தான் பெயர் பொரிக்கப்பட்ட ஜெர்சியை இந்திய வீரர்கள் அணிவது எப்படி சரியாக இருக்கும் என ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது. 

ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிசிசிஐ கிரிக்கெட்டிற்குள் அரசியலைக் கொண்டு வருகிறது. முதலில் பாகிஸ்தான் வர மறுத்தது. பின்னர் இந்திய கேப்டனை குழு புகைப்படங்களுக்கு அனுப்ப மறுத்தது. தற்போது ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட மறுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த போக்கை தடுத்து நிறுத்தி பாகிஸ்தான் பக்கம் ஐசிசி நிற்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News