உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO யாரெல்லாம் தெரியுமா?

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் தொழிலதிபர்களின் விபரங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக எலான் மஸ்க் உள்ளார். ஆண்டுதோறும் சுமார் 23.5 பில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இவருக்கு அடுத்தப்படியாக டிம் குக், சுந்தர் பிச்சை அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். 

1 /7

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலாம் மஸ்க் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் எலக்ட்ரிக் வாகனத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். இவரது வருமானம் ஆண்டுக்கு 23.5 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.03 லட்சம் கோடியாகும். 

2 /7

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் தான் எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக உள்ளார். அவரது ஆண்டு வருமானம்  770.5 மில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் ஆகும். 

3 /7

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை ஆண்டிற்உ 280 மில்லியன் டாலரை சம்பாதிக்கிறார். இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். 

4 /7

ஜென்சன் ஹுவாங் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றதாகும். இவர் ஆண்டிற்கு 561 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். 

5 /7

பொழுதுபோக்கு துறையில் சிறந்து விழங்கும் நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்ஸ் ஆண்டிற்கு 453.5 மில்லியன் சம்பாதிக்கிறார். 

6 /7

ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ்  என்பது ஒரு பயோடெக்னாலஜி நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லியோனார்ட் ஷ்லீஃபர் ஆவார். இவர் 452.9 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

7 /7

மைக்ரோசாப்டின் சிஇஒ சத்யா நாதெல்லா இந்நிறுவனத்தை கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு மாற்றியுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 309.4 மில்லியன் கோடியாகும்.