துலாம் ராசியில் சூரிய சஞ்சாரம்: வெற்றிகளை குவிக்க போகும் ‘3’ ராசிகள்!

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் சமீபத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். துலாம் ராசியில் சூரிய பகவான் சுப பலன்களை வழங்குவதில்லை என்கின்றனர் ஜோதிடர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2022, 03:15 PM IST
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும்.
  • மிதுன ராசியில் புதன் ஆதிக்கம் செலுத்துகிறது.
துலாம் ராசியில் சூரிய சஞ்சாரம்: வெற்றிகளை குவிக்க போகும் ‘3’ ராசிகள்! title=

துலாம் ராசியில் சூரிய சஞ்சாரம்: ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் சமீபத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். துலாம் ராசியில் சூரிய பகவான் சுப பலன்களை வழங்குவதில்லை என்கின்றனர் ஜோதிடர்கள். துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் மற்றும் சுக்கிரன் மற்றும் சூரியன் இடையே பகை உணர்வு காரணமாக, அதிக சுப பலன்களைப் கொடுப்பதில்லை என்கின்றனர். எனினும், குறிப்பிட்ட 3 ராசிகள் வியாபாரத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்று வளம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மிதுனம்:

சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் சூரியன் ஐந்தாம் வீட்டில் நுழைகிறார். இது குழந்தைகள், காதல் விவகாரங்கள் மற்றும் உயர்கல்வியின் வீடு என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் உறவுகளும் வலுவாக இருக்கும். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும். இது தவிர மிதுன ராசியில் புதன் ஆதிக்கம் செலுத்துகிறது. சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான நட்பு உணர்வின் காரணமாக, இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பலனளிக்கப் போகிறது.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி பலன் தரும். அவர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் சூரியன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது நோய் மற்றும் பகைக்கான இடம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்கு வீரமும் தைரியமும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்ல முடியும். இதுமட்டுமின்றி நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். 

கன்னி:

இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த ராசியை ஆளும் கிரகம் புதன் மற்றும் புதன் மற்றும் சூரியன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யும் திட்டமும் வெற்றி பெறும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், தொண்டையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், இந்த நேரத்தில், வேலையை சற்று எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News