Sobakrith: சோப கிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷத்துக்கு மங்கலம்! மிதுனத்துக்கு ஐயோ பாவம்

Sobakrith Chithirai Tamil New Year: தமிழ் புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும்? பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என சோப கிருது ஆண்டு எச்சரிக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை ரிஷப ராசிக்கு மட்டுமே

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2023, 12:29 PM IST
  • சோப கிருது ஆண்டில் குபேரனின் ஆசி பெறும் ராசி
  • தமிழ் புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும்?
  • பொருளாதார மந்தநிலை எச்சரிக்கை எந்த ராசியினருக்கு?
Sobakrith: சோப கிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷத்துக்கு மங்கலம்! மிதுனத்துக்கு ஐயோ பாவம் title=

இனிய தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று சோப கிருது ஆண்டு பிறக்கிறது. மொத்தமுள்ள 60 தமிழ் வருடங்களில், சோப கிருது 37வது ஆண்டாக உள்ளது. சோப கிருது என்பதன் தமிழ் பொருள், மங்கலம் என்பதாகும். அனைவருக்கும் மங்கலத்தைக் கொடுக்கும் சோபக்கிருது ஆண்டு யாருக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சோப கிருது ஆண்டு ராசி பலன் 2023

கிரக நிகழ்வுகள் மற்றும் கிரகப் பரிமாற்றங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சோப கிருது ஆண்டு ராசி பலன் 2023, ஒவ்வொரு ராசியின் வாழ்க்கையிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அனுமானங்களை பகிர்ந்துக் கொள்கிறோம். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்க இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

யாருக்கு என்ன பலன்?

இந்திய ஜோதிட கணிப்புகளின்படி, உலகில் உள்ள மக்கள் அனைவரும் 12 ராசிகளுக்குள் வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இருப்பவர்கள், வெவ்வேறு துறையினர் என அனைவருக்குமான பொதுப்பலன்கள் இவை. அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலை, சேர்க்கை, தோஷம் என பல விதங்களில் தனி நபருக்கான பலன்கள் மாறுபடும்.

மேலும் படிக்க | Rahu Transit 2023: 3 ராசிகளின் நிம்மதியைக் கெடுக்க வரும் ராகு பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

மேஷம் ரிஷபம் மற்றும் மிதுனம்

இந்தப் பதிவில் மேஷம், ரிஷபம், மிதுனம் என மூன்று ராசிகளுக்கான சோப கிருது ஆண்டு பலன்களை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம் - சோப கிருது ஆண்டு பலன் 
சோப கிருது ஆண்டு தொடங்கும்போதே, மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான், இரண்டாம் வீட்டில் ரிஷபத்தில் வக்ர நிலையில் இருப்பதால், பொருளாதார ரீதியாக நிம்மதி கிடைக்குக்ம். ஆனால், உங்கள் பேச்சு அதிகார போதையில் இருப்பதாக பிறர் நினைக்க வாய்ப்பு உண்டு, எனவே வாயை திறப்பதற்கு முன் இரண்டு முறை யோசிக்கவும்.

உங்கள் ராசியில் இருந்து பன்னிரண்டாவது வீட்டில் இருக்கும் குரு சுபச் செலவுகளை அதிகரிப்பார். ஆன்மீக மற்றும் மத நடவடிக்கைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.  மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான புதன் ஒன்பதாம் வீட்டில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை ஏற்படுத்துவார். 2023 ஜனவரி 17 ஆம் தேதி, சனிப் பெயர்சிக்குப் பிறகு பண வரத்து அதீதமாக இருக்கும்.

மேலும் படிக்க | Neptune In Pisces: காதலையும் கற்பனையும் நனவாக்கும் கிரகப் பெயர்ச்சி! மீனத்துக்கு கொண்டாட்டம்

ரிஷபம் - சோப கிருது ஆண்டு பலன்
தமிழ் புத்தாண்டு ரிஷப ராசியினருக்கு மிதமான பலன்களையேக் கொடுக்கும்.கடின உழைப்பு நிறைந்த ஆண்டாக இருந்தாலும், அது நீண்ட கால அடிப்படையில் பெரிய வெற்றியை தரும். செலவுகள் அதிகரித்தாலும், பண வரவும் இருக்கும் என்பதால், நிதிநிலையில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மே முதல் ஆகஸ்ட் மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும்.

ஆரோக்கியம் சீர் கெடுவதால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். சுமாரான ஆண்டாகவே சோப கிருது ஆண்டு இருக்கும். எனவே பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்

மேலும் படிக்க | மேஷத்தில் இணையும் சுக்ரன் -ராகு! பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

மிதுனம் சோப கிருது ஆண்டு பலன்
சோப கிருது ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக பிரச்சனையானதாக இருக்கும். மிதுனத்தின் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் வக்ர நிலையில் இருப்பதால் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், இது வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சி, உங்கள் பணச்சிக்கல்களைத் தீர்த்துவைக்கும். ஆனால், குருவுடன் இணையும் ராகுவின் கூட்டணியால் மனக்கலக்கங்கள் தொடரும். அக்டோபர் 30-ம் தேதி ராகு பெயர்ச்சிக்கு பிறகு, கஷ்டங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அப்போது நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனீஸ்வரருடன் கூட்டுக் குடித்தனம் செய்யப்போகும் புதன்! பணவரவால் ஜாக்பாட் லாபம் பெறும் ராசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News