Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?

Shani Uday 2023: கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் ஆறே நாட்களில் தனது தியான நிலையில் இருந்து விடுபட்டு, மார்ச் 6ஆம் தேதி அதே ராசியில் மீண்டும் உதயமானார், இந்த ராசிகளை மட்டும் இன்னும் கொஞ்ச நாளைக்கு விட்டு வைப்பார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2023, 06:00 AM IST
  • அமைதியாய் இருந்த சனியின் அதகளம் ஆரம்பம்
  • அதிரடியாக களம் இறங்கினாலும் இந்த ராசிகளை கண்டு கொள்ள மாட்டார் சனீஸ்வரர்
  • மார்ச் 6ம் தேதி முதல் சனி பகவானின் தாக்கம்
Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?  title=

Shani Uday Moderate Effects: கும்பத்தில் அஸ்தமனமான ஆறே நாட்களில் மீண்டும் உத்வேகத்துடன் உதயமான சனி, மக்களின் தலைவிதியை மாற்றும் செயலில் இறங்கிவிட்டார். சனி பகவான் அவருக்குப் பிடித்த ராசியில் உதயமாகிவிட்டார். சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த உதயம் கெடுதலையும் செய்யாது, நன்மையையும் செய்யாது. சனி நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல் செய்யாமல் இருக்கிறார் என்று ஆசுவாசப்பட வேண்டிய ராசிகள் இவை.  

மார்ச் 6, 2023 இரவு 11.36 மணிக்கு சனி பகவான் உதயமானார். கும்ப ராசியில் பெயர்ச்சியான சில நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமான சனீஸ்வரர். நான்கு ராசிகளுக்கு நன்மையோ தீமையோ செய்யாமல் அமைதியாக இருப்பார்

சிம்மம்:

சனியின் உதயத்தினால், சுமையாய் தோன்றிய அனைத்தும், சாதாரணமாக இருப்பதாக தோன்றும். அத்தியாவசியமான தேவை இருந்தால் தவிர கடன் வாங்க வேண்டாம். மேலும் இந்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், மனதில் கொஞ்சம் நிம்மதி இருக்குக்ம்.  

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! 

மிதுனம்:
இந்த ஆண்டு, கும்ப ராசியில் பெயர்ந்த சனி, மனதில் இருந்து வந்த கலக்கத்துக்கு ஆறுதல் கொடுப்பது போல இருக்கும். இதுவரை மிகப் பெரியதாக எதிர்பார்ப்பு வைத்திருந்த விஷயங்கள் எல்லாம், ஒன்றும் பெரியதில்லை என்ற அளவுக்கு மனமாற்றம் இருக்கும்.   

இந்த காலகட்டத்தில், மனதில் ஒருவிதமான நிச்சலனம் ஏற்படும். யாரிடமும் பேசப்பிடிக்காது. பார்க்கப்போனால், அமைதியாய் இருப்பது எப்படி என மற்றவர்களுக்கு பாடம் எடுக்கத் தொடங்கும் அளவுக்கு எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பீர்கள். .

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். உடல் நலக் குறைவு ஏதேனும் ஏற்பட்டால், கவலைப்பட வேண்டாம். சனி பகவான், பெரியதாக எதையும் செய்ய மாட்டார். மனதில் இருந்து வந்த கலக்கங்கள் தெளிந்துவிடும்.

துலாம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கும் என்றாலும், இந்த காலகட்டத்தில். சனிப்பெயர்ச்சி காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. விரும்பியது கிடைத்தாலும், அதில் பெரிய அளவு மகிழ்ச்சி இருக்காது.  

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News