சனி பெயர்ச்சி 2023: மகாபாக்ய ராஜயோகத்தால் ஆதாயம் பெறும் 4 ராசிகள்!

Shani Gochaar 2023: வரும் மார்ச் 15 அன்று, சனி நட்சத்திரம் மாறி ஷதாபிஷா நட்சத்திரத்தில் நுழையப் போவதால், இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2023, 02:53 PM IST
  • 30 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சனி, கும்பத்தில் நுழைந்தார்.
  • சனியின் இந்த நிலையால் மகாபாக்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.
சனி பெயர்ச்சி 2023: மகாபாக்ய ராஜயோகத்தால் ஆதாயம் பெறும் 4 ராசிகள்! title=

Shani Gochaar 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சித்தரங்களில் மாற்றுகின்றன. சனி பகவான், நீதியின் கடவுள் மற்றும் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு ஜனவரி 17 அன்று நுழைந்தார்.

இப்போது மார்ச் 15, 2023 அன்று, சனி நட்சத்திரம் மாறி ஷதாபிஷா நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். சனியின் இந்த நிலை 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகாபாக்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மறுபுறம், 4 ராசிக்காரர்களுக்கு இந்த மஹாபாக்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கு தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | குரு-சுக்கிரன் சேர்க்கை, இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை ஜாக்பாட்

நான்கு அதிர்ஷ்ட ராசிகள்

ரிஷபம்: உங்களுக்கு மிகவும் சுப பலன் தரும் மார்ச் 15இல் சனியின் ராசி மாறியவுடன் மகாபாக்ய ராஜயோகம் உருவாகும். நீங்கள் உங்கள் தொழிலில் பெரிய சாதனைகளை அடையலாம். பெரிய பதவி, பணம் ஆகியவை மட்டுமின்றி நீங்கள் விருது பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கலாம். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: மஹாபாக்ய ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும், துணிச்சலையும் அதிகரிக்க செய்யும். மூதாதையரின் சொத்துக்களால் நீங்கள் ஆதாயம் பெறலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தற்செயலாக பணம் கிடைக்கலாம். வியாபாரிகள் சிக்கிய பணம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்: மஹாபாக்ய ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும். வெளியூருக்கு பயணம் செல்லலாம். தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து ஆதாயம் அடைவார்கள். இந்த நேரம் மாணவர்களுக்கு அற்புதமானது. பெரிய வெற்றியை அடைய முடியும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

தனுசு: மகாபாக்ய ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார பலன்களையும் முன்னேற்றத்தையும் தரும். இக்காலம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஏற்றத்தை தரும். ஆளுமை பயனுள்ளதாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Sun transit: பங்குனி மாதத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! ஜாக்பாட் லக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News